முகப்பு /செய்தி /திண்டுக்கல் / திண்டுக்கலில் ஊருக்குள் புகுந்த மஞ்சள் பைத்தியம் எறும்புகள்.. கால்நடைகளின் கண்களைத் உண்ணும் வினோதம் - மக்கள் அச்சம்

திண்டுக்கலில் ஊருக்குள் புகுந்த மஞ்சள் பைத்தியம் எறும்புகள்.. கால்நடைகளின் கண்களைத் உண்ணும் வினோதம் - மக்கள் அச்சம்

மஞ்சள் பைத்தியம் எறும்புகள்

மஞ்சள் பைத்தியம் எறும்புகள்

Yellow crazy ant : திண்டுக்கல் அருகே மஞ்சள் பைத்தியம் எறும்புகள், மலைப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம வாசிகளின் கால்நடைகள், பயிர்களைச் சேதப்படுத்துவதாகத் தகவல் வெளியாகி விவசாய மக்களைப் பயத்தில் ஆழ்த்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள நத்தம் பகுதியைச் சுற்றிப் பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி என்று 7 மலைக் கிராமங்கள் உள்ளது. 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வகை எறும்புகள் அங்குக் காணப்பட்டு வந்துள்ளது. தற்போது அவை பெருகி ஊருக்குள் வந்துவிட்டது. அதனிடம் இருந்து தப்பிக்கப் பலரும் தங்களது வீட்டை விட்டு வெளியே வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் ஈரமான வெப்பமண்டலங்கள் மேலாண்மை ஆணையம் தகவலின் படி, இந்த மஞ்சள் பைத்தியம் எறும்புகளுக்கு இந்த பெயர் இதனின் வீரியமான செயல்திறனால் வந்தது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் அறிவித்த 100 கொடூரமான உயிரினங்கள் பட்டியலில் இந்த எறும்பும் ஒன்று.

இதனைப் பற்றிப் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தெரிவிக்கையில், காட்டுக்குள் சென்ற உடனே இவை விறுவிறு வென்று மேல் ஏறிவிடுகிறது. இதனால் கை கால்களில் அலர்ச்சி ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர்.மேலும் இவை குறிப்பாகக் கண்களை மட்டும் தாக்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : கூகுள்பே, போன்பே மூலம் ரேஷன் பொருள் வாங்க ஏற்பாடு.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

இவை பார்மிக் அமிலத்தை விலங்குகள் கண்களில் வெளிப்படுத்துக்கிறது இதனால் விலங்குகளுக்குக் கண்பார்வை போகும் அபாயம் உள்ளது. இது 4 மி,மீ அளவு இருக்கும். மேலும் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த வகை எறும்புகள் தற்போது பெருகி பப்புவா நியூ கினியா, மொரிஷியஸ் மற்றும் தென்கிழக்கு ஆசியா உட்பட இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் தீவுகளில் காணப்படுகிறது.

First published:

Tags: Ants, Dindugal, Eyes