முகப்பு /செய்தி /திண்டுக்கல் / கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : தனிப்படை போலிசார் இது வரை 316 பேரிடம் விசாரணை

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : தனிப்படை போலிசார் இது வரை 316 பேரிடம் விசாரணை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Kodaikanal | கோடநாடு பங்களாவில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவ வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kodaikanal, India

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தனிபடை போலிசார் இது வரை 316 பேரிடம் விசாரணை செய்துள்ளனர். இதற்கு மூலையாக செயல்பட்ட கனகராஜின் பெயரில் இருந்த 6 சிம்கார்டுகள் உள்பட 16 செல்போன்களை கைப்பற்றி இருப்பதாகவும்,  சம்பவம் நிகழ்ந்த காலத்தில் 100 பேர் கனகராஜை தொடர்ப்பு கொண்டு இருப்பதாகவும், அப்போது பதிவான 516 தகவல் பறிமாற்றங்களை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி இருப்பதாகவும் காவல்துறை சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டது.

அதனையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ், ஜம்சீர்அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர்.

அப்போது காவல் துறை சார்பாக ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் சாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் வாளையாறு மனோஜ்  வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தனிபடை போலிசார் இது வரை 316 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் கொலை, கொள்ளைக்கு மூலையாக செயல்பட்டு சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கனகராஜின் பெயரில் இருந்த 6 சிம்கார்டுகள் உள்பட 16 செல்போன்கள் கைப்பற்றி இருப்பதாகவும்,  சம்பவம் நிகழ்ந்த காலத்தில் 100 பேர் கனகராஜை தொடர்ப்பு கொண்டதில் 516 தகவல் பறிமாற்றம் நடைபெற்று இருப்பது தெரிவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Also see...ஜிப்மரில் பாராசிட்டமால் மாத்திரை கூட இல்லை... அதிகாரிகள் ஒப்புதல்

அந்த தகவல் பறிமாற்றங்களின் உண்மை தன்மையை அறிய ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும்  நீதிபதியிடம் தெரிவிக்கபட்டது. அதனை பதிவு செய்து கொண்ட மாவட்ட நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

செய்தியாளர்: ஐயாசாமி, கொடைகானல்

First published:

Tags: Crime News, Kodanadu estate, Murder case, Robbery