ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

வேகமாக பரவும் உன்னி காய்ச்சல்... திண்டுக்கல்லில் பொதுமக்கள் பீதி..!

வேகமாக பரவும் உன்னி காய்ச்சல்... திண்டுக்கல்லில் பொதுமக்கள் பீதி..!

மாதிரி படம்

மாதிரி படம்

Unni Fever : திண்டுக்கல்லில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாநகராட்சி 48-வது வார்டு பகுதியில் உன்னி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில், காந்திஜி நகர் மற்றும் மேட்டுப்பட்டி பகுதிகளை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனவே, இப்பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், உன்னி காய்ச்சல் தொடர்பாக, சுகாதாரத்துறையினர் பெயரளவுக்கு மட்டுமே பாதிக்கப்பட்ட நபர்களின் குடியிருப்பு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாநகராட்சி, சுகாதார துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சலால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

First published:

Tags: Dindigul, Local News, Virus