முகப்பு /செய்தி /திண்டுக்கல் / விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...

விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...

கொடைக்கானல்

கொடைக்கானல்

ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி மேற்கொண்டும்  அவ்வ‌ப்போது சுற்றுலாத‌ல‌ங்க‌ளில் ஏற்ப‌டும் போக்குவ‌ர‌த்து நெரிச‌லையும் பொருட்ப‌டுத்தாது சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர், 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kodaikanal, India

கொடைக்கானலில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க வார விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழகமட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட ப‌ல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா தலங்களில் மேனிகளில் தவழ்ந்து மேக கூட்டங்களை கண்டு ரசித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

கொடைக்கானலில் காலை முதலே நிலவும் இதமான கால நிலையை சுற்றுலா பயணிகள்  அனுபவித்தவாறு நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும்,ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி மேற்கொண்டும்  அவ்வ‌ப்போது சுற்றுலாத‌ல‌ங்க‌ளில் ஏற்ப‌டும் போக்குவ‌ர‌த்து நெரிச‌லையும் பொருட்ப‌டுத்தாது சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

Read More: தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த வார விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக‌ரிப்பால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சி அடைந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:  ஜாஃபர் சாதிக்- கொடைக்கானல்

First published:

Tags: Dindugal, Kodaikanal, Tourist spots