முகப்பு /செய்தி /திண்டுக்கல் / சில்லுனு க்ளைமெட்.. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்

சில்லுனு க்ளைமெட்.. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

Dindigul News : கொடைக்கான‌லில் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ருகை அதிக‌ரிப்பால் பிர‌தான‌ சாலைக‌ளில் க‌டும் போக்குவ‌ர‌த்து நெரிச‌ல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kodaikanal, India

திண்டுக்க‌ல் மாவ‌ட்டம் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதியில் நில‌வும் இத‌மான‌ கால‌நிலையினை அனுப‌விக்க‌ விடுமுறை நாட்க‌ளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் ச‌னிக்கிழ‌மையான‌ இன்று வ‌ழ‌க்க‌த்தினை விட‌ பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதன்படி காலை முத‌லே சுற்றுலாப்ப‌யணிக‌ளின் வ‌ருகை அதிக‌ரித்து காணப்பட்டது. இதன்காரணமாக  மூஞ்சிக்க‌ல், க‌ல்ல‌றைமேடு, ஏரிச்சாலை, அப்ச‌ர்வேட்ட‌ரி உள்ளிட்ட ப‌ல்வேறு  பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

மேலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையின் இருபுற‌ங்க‌ளிலும் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமலும், பொதும‌க்க‌ள் இத‌ர‌ப‌ணிக‌ளுக்கு செல்ல‌முடியாம‌லும் கடும் அவதியடைந்தனர்.

காவ‌ல‌ர்க‌ள் ம‌ற்றும் போக்குவ‌ர‌த்து காவ‌ல‌ர்க‌ள் இணைந்து போக்குவ‌ர‌த்து நெரிச‌லை சீர் செய்யும் ப‌ணிக‌ளில் தீவிர‌மாக‌ ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர். வார‌ இறுதி நாட்க‌ளான‌ ச‌னி ம‌ற்றும் ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணமாக கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் அம‌ர்த்தி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்  என்ப‌தே பல்வேறு த‌ர‌ப்பின‌ரின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து. காலை முத‌லே அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகையால் சுற்றுலா தொழில் புரிவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Dindigul, Kodaikanal, Local News, Tamil News