Home /News /dindigul /

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்...

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்...

கொடைக்கானல்

கொடைக்கானல்

kodaikanal | கொடைக்கானலில் தொடர் விடுமுறையில் சுற்றுலா பயணிகள், குவிந்து வருகின்றனர். அருவிகளில் சீராக கொட்டி வரும் தண்ணீர் முன் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும் குளித்தும் உற்சாகம் அடைந்து வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kodaikanal, India
    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதலே குளிர்ந்த  சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த இதமான கால நிலையை அனுபவித்து சுற்றுலா பயணிகள் இயற்கை அழகினை கண்டு ரசித்து வருகின்றனர்.

    குறிப்பாக கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார்  அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளில் சீராக கொட்டி வரும் தண்ணீரை கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    Also see... அமைச்சர்களுக்கு காறர் உத்தரவுகளை பிறப்பித்த தேஜஸ்வி!

    மேலும் சுற்றுலா பயணிகள் வருகையால் கொடைக்கானல் நகர் பகுதிகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழில் புரிவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக், கொடைக்கான‌ல்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Kodaikanal, Tourist spots

    அடுத்த செய்தி