Home /News /dindigul /

கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்தது... அய்யலூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை

கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்தது... அய்யலூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை

தக்காளி

தக்காளி

Dindigul | தொடர் மழையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட தக்காளி செடிகள் நாசம் ஆகின. அதனால் அய்யலூர் தக்காளி சந்தைக்கு தக்காளி வரத்து குறைவானது. இதன் காரணமாக தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Dindigul, India
    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தக்காளி சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களான கடவூர்,  காக்காயன்கவுண்டனூர், மலைப்பட்டி, கொம்பேறி பட்டி, புதுப்பட்டி, சுக்காம்பட்டி, வடமதுரை, புத்தூர் ஆகியவற்றில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அய்யலூர் பேரூராட்சி மற்றும் வடமதுரை ஊராட்சி ஒன்றியம் கிராமங்களில் தக்காளி விவசாயம்தான் பிரதான விவசாயமாக உள்ளது. கிட்டத்தட்ட பத்தாயிரம் ஏக்கரில் தக்காளி விளைவிக்கப்படுகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி பயிர் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பொதுவாக தக்காளி விளைவதற்கு நல்ல வெயில் தேவை ஆனால் கடும் மழையில் பூக்கள் உதிர்ந்து தக்காளி காய்கள் சேதம் அடைந்து வரத்து குறைந்துள்ளது.

    அய்யலூர் மார்க்கெட்டுக்கு தினசரி 80 முதல் 100 டன் தக்காளி வரத்து இருக்கும். ஆனால் தொடர் மழை காரணமாக தற்போது பத்து டன் தக்காளிதான் வருகிறது. கடந்த வாரம் வரை  14 கிலோ எடையுள்ள ஒரு தக்காளி பெட்டி ரூபாய் 75 முதல் 100 வரை விற்கப்பட்டது.

    அதாவது 1 கிலோ 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விலை போனது தக்காளி தற்போது ஒரு வார காலமாக தொடர் மழையால் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி  ரூபாய் 600 முதல் 700 வரை விலை போகிறது. அதாவது ஒரு கிலோ சந்தையிலேயே 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது. மற்ற நாட்களில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும். ஆனால் அந்த மாநிலங்களிலும் தொடர் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது.

    இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வு விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும் பத்தாயிரம் ஏக்கர் விளைநிலத்தில் தக்காளி பயிர் நாசமாகி உள்ளதை நினைத்து வேதனை படாமல் இல்லை. இதற்காக அரசு இழப்பீடு தருமா என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

    Also see... பேருந்து ஜன்னல் மீது ஏறி பயணம் செய்யும் மாணவர்கள்..

    மேலும் இதே தொடர் மழை நீடித்தால் மேலும் தக்காளி பயிர்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதேபோல்,  தக்காளி விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும்  விவசாயிகள்  தெரிவித்தனர்.

    செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல் 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dindigul, Farmers, Tomato Price

    அடுத்த செய்தி