ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

ரூ. 3 கோடியை தாண்டியது பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை..!

ரூ. 3 கோடியை தாண்டியது பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை..!

காணிக்கையை எண்ணிய மாணவர்கள், ஆசிரியர்கள்.

காணிக்கையை எண்ணிய மாணவர்கள், ஆசிரியர்கள்.

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 417 ம் கிடைத்தன.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Palani, India

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணிக்கை நடைபெற்றதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ. 3 கோடியை தாண்டியது.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் சஷ்டி விழா பக்தர்கள் வருகை காரணமாக 28 நாட்களில் நிறைந்தது.  இதையடுத்து கடந்த இரு நாட்களாக  உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது.

இதையும் படிக்க : ''அவங்கள உள்ள விடாதீங்க'' பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் பெண்கள் போராட்டம்!

நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர், ஆசிரியர்கள், திருக்கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.  இதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 3,01,20,654 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன பிஸ்கட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தங்கம் 999 கிராமும், வெள்ளி 19,379 கிராமும் இருந்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 417 ம் கிடைத்தன.  இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் : அங்குபாபு (பழனி)

First published:

Tags: Local News, Palani, Palani Murugan Temple, Temple