ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

இறந்ததாக இறுதிச் சடங்குடன் அடக்கம்.. வீட்டுக்கு திரும்பியவரை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பம்

இறந்ததாக இறுதிச் சடங்குடன் அடக்கம்.. வீட்டுக்கு திரும்பியவரை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பம்

இறந்ததாக கருதப்பட்ட நபர்

இறந்ததாக கருதப்பட்ட நபர்

Dindigul | இறந்துபோனதாக கூறப்பட்ட பழனிச்சாமி திண்டுக்கல் நகருக்குள் சுற்றி திரிந்துள்ளார். இதனைப்பார்த்த ஊர் மக்கள், “நீ இறந்து விட்டதாக கூறி உனது உடலை அடக்கம் செய்து காரியங்கள் அனைத்தும் செய்து விட்டோம்” என தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Dindigul, India

  திண்டுக்கல் அருகே இறந்துபோன நபர் மீண்டும் உயிருடன் வீட்டிற்கு வந்ததால் குடும்பத்தார் மற்றும் ஊர் மக்கள்  அதிர்ச்சியடைந்தனர். 

  திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள AMC சாலையில் கடந்த 17ம் தேதி தனியாக நடந்து வந்த சுமார் 65 வயது மதிக்க நபர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து சுயநினைவின்றி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவர் யார், என்ன பெயர், எந்த ஊர் என்ற விவரம் தெரியாத நிலையில் இவரது புகைப்படத்தை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

  மேலும் இவர் பற்றி விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு தகவல் தெரிவித்திருந்தனர். வாட்ஸ்அப்பில் வந்த தகவலை பார்த்த  சின்னதம்பி மற்றும் மகள் வனிதா ஆகியோர் இவர் தனது தந்தை பழனிச்சாமி என்றும்  திண்டுக்கல் அருகே உள்ள பெரிய கோட்டை சொந்த கிராமம் என்றும்  கூறினர்.

  இதையும் படிங்க : கொள்ளை அழகில் கொடைக்கானல்.. ஆங்காங்கே கொட்டும் நீர்வீழ்ச்சிகள் - கொண்டாட்டத்தில் சுற்றுலா பயணிகள்

  மேலும் இவர் எந்த வேலைக்கும்  செல்லாமல் ஊர் சுற்றி திரிபவர் என்றும் வாரக்கணக்கில் வெளியூர் சென்று விட்டு திரும்புவார் என்று தெரிவித்தனர். இதனிடையே பழனிச்சாமி சுயநினைவற்ற நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதனைத்தொடர்ந்து அவரது மகன் சின்னத்தம்பி தந்தையின் உடலை பெற்றுச் சென்று பாறைபட்டியில் அவருக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்து அடக்கம் செய்தார்.

  இந்நிலையில், நேற்று 20.10.22 இறந்துபோனதாக கூறப்பட்ட பழனிச்சாமி திண்டுக்கல் நகருக்குள் சுற்றி திரிந்துள்ளார். இதனைப்பார்த்த ஊர் மக்கள், “நீ இறந்து விட்டதாக கூறி உனது உடலை அடக்கம் செய்து காரியங்கள் அனைத்தும் செய்து விட்டோம்” என தெரிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க : காட்டு பகுதியில் கணவர் மர்ம மரணம்.. மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை

  இதனைகேட்டு அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி பாறைப்பட்டிக்கு சென்றுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி மகன் மற்றும் மகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பழனிச்சாமியின் மகள் வனிதா மகன் சின்னத்தம்பி ஆகியோர் இறந்ததாக கூறப்பட்ட தனது தந்தை உயிருடன் வந்து விட்டதாக கூறி வடமதுரை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

  இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்ததாக கருதப்பட்ட நபர் மீண்டும் ஊருக்குள் வந்த சம்பவம் பொதுமக்கள் இடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Death, Dindigul