என் சாவுக்கு தனியார் வங்கிதான் காரணம் - உருக்கமாக வீடியோ வெளியிட்டு ஜவுளிவியாபாரி தற்கொலை
என் சாவுக்கு தனியார் வங்கிதான் காரணம் - உருக்கமாக வீடியோ வெளியிட்டு ஜவுளிவியாபாரி தற்கொலை
தற்கொலை செய்துக்கொண்ட லட்சுமணன்
லட்சுமணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது செல்போனில் இறுதியாக ஒரு உரையாடலை பதிவு செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பி அனுப்பி விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிலக்கோட்டை அருகே கடன் தொல்லையால் தூக்குப்போட்டு ஜவுளி வியாபாரி தற்கொலை வங்கிகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உருக்கமான இறுதி வாக்குமூலம் வீடியோவால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே குண்டலபட்டி சேர்ந்த லட்சுமணன் வயது 46. வீடு வீடாகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கிகள் வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதாக அறிவிப்பு செய்தனர். அடிப்படையில் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய போது 82 பைசா வட்டி என்று கூறியதாகவும், பின்னர் கூடுதலாக வட்டி கேட்டதாகவும், இதன் காரணமாக கடனாளி ஆனார்.
இதனால் தனது மனைவி அழகேஸ்வரிக்கும், லட்சுமணனுக்கும் அடிக்கடி கடன் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அழகேஸ்வரி கோபித்துக் கொண்டு தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வேதனை அடைந்த லட்சுமணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது செல்போனில் இறுதியாக ஒரு உரையாடலை பதிவு செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பி அனுப்பி விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த உரையாடலில் கூறியதில் என் மரணத்திற்கு காரணம் தனியார் வங்கிகள் என்றும், என்னை நம்பி 5 பேர்கள் கடன் வாங்கி தந்து அவர்களையும் தர்மசங்கடத்தில் தலைகுனிய வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இந்த 5 பேரும் என்னை மன்னிக்கவும், தனியார் வங்கிகள் 6,87,000 ரூபாய் கடன் கொடுத்து 80 பைசா வட்டி என்று கூறினார்கள். ஆனால் தற்போது கூடுதலாக வட்டி வாங்கி வருகிறார்கள்.
அதை கடந்த 3 வருடமாக கொரானா நோய்த்தொற்று காலத்தில் கூட சரியாக கட்டி வந்தேன். தற்போது நூல் விலை மற்றும் ஜவுளி விலைகள் கூடியதால் விலை உயர்வு காரணமாக 10 பேர் வேலை செய்த இடத்தில் 2 பேர்தான் வேலை செய்யக்கூடிய அளவுக்கு தொழிலில் நஷ்டம் அடைந்துள்ளது. என் சாவுக்கு முழு காரணம் தனியார் வங்கியின் இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரும் அந்த வங்கிகளும் தான் பொறுப்பு என உருக்கமாகப் பேசி அந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதைப் பார்த்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக நிலக்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலா முத்தையா நேரில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட் ராஜ் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு லட்சுமணன் உடலை பரிசோதனை செய்து உறவினர்களும் ஒப்படைக்கப்பட்டது. இந்த உரையாடல் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இறந்துபோன லட்சுமணனுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.