ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

உண்டியலில் 300 ரூபாய் திருட்டு... பழனி முருகன் கோவிலில் தென்காசி திருடன் கைவரிசை...

உண்டியலில் 300 ரூபாய் திருட்டு... பழனி முருகன் கோவிலில் தென்காசி திருடன் கைவரிசை...

பழனி முருகன் கோயில் உண்டியலில் கைவரிசை

பழனி முருகன் கோயில் உண்டியலில் கைவரிசை

Palani murugan temple | கைது செய்யப்பட்ட கொள்ளையன் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருப்பது கண்டுபிடிப்பு.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Palani | Dindigul

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியலில் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

பக்தர்கள்  நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் சார்பில் ஆங்காங்கே உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. உண்டியலில் பக்தர்கள் பணம் மற்றும் பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இந்த நிலையில் உண்டியலில் இருந்த பணத்தை திருடுவதற்காக நோட்டமிட்டபடி தென்காசியை சேர்ந்த சுந்தர் என்பவர் சுற்றிவந்துள்ளார். சுந்தர் உண்டியலில் இருந்து ரூ. 300 ரூபாய் பணத்தை திருடியதை பார்த்த கோயில் பாதுகாவலர்கள் கையும் களவுமாக சுந்தரை பிடித்து அடிவாரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட சுந்தர் மீது ஏற்கனவே தென்காசி காவல் நிலையம்  உட்பட பல இடங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. சுந்தர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்த அடிவாரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: அங்குபாபு, பழனி.

First published:

Tags: Local News, Palani, Palani Murugan Temple, Theft