ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

காட்டு பகுதியில் கணவர் மர்ம மரணம்.. மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை

காட்டு பகுதியில் கணவர் மர்ம மரணம்.. மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை

சம்பவம் நடந்த காட்டு பகுதியில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

சம்பவம் நடந்த காட்டு பகுதியில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Dindigul Murder | காவல்துறையினர் கேட்கும் கேள்விக்கு முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால் அவரது மனைவி விஜயசாந்தியை போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India

வேடசந்தூர் அருகே காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சந்தைப்பேட்டையை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நவீன்குமார்(35).இவருக்கும், சாலையூர் நால்ரோட்டை சேர்ந்த விஜயசாந்தி(30) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஆண் குழந்தைகள், பெண் குழந்தை உள்ளது. நவீன்குமார் வேடசந்தூரில் உள்ள தனியார் இரும்பு கடையில் லோடுமேனாக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நவீன்குமாருக்கும், விஜயசாந்திக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார் விஜயசாந்தியை தாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : கொள்ளை அழகில் கொடைக்கானல்.. ஆங்காங்கே கொட்டும் நீர்வீழ்ச்சிகள் - கொண்டாட்டத்தில் சுற்றுலா பயணிகள்

இந்நிலையில், கோடாங்கிபட்டி அருகே காட்டுப் பகுதியில் நவீன்குமார் கழுத்து அறுபட்டு மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் வேடசந்தூர் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் கேட்கும் கேள்விக்கு முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால் அவரது மனைவி விஜயசாந்தியை போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் கொலை சம்பவம் அரங்கேறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர்: R.சங்கர் - திண்டுக்கல்

First published:

Tags: Dindugal, Murder