வேடசந்தூரில் அரசு பேருந்து பிரேக் இல்லாமல் மேட்டில் ஏற முடியாமல் பின்னோக்கி சென்றதால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர் பிரேக் பிடிக்காத வண்டி தள்ளு தள்ளு தள்ளு தள்ளி வண்டியை ஓரம் கட்டிய பொதுமக்கள் ஓட்டுநர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு குஜிலியம்பாறையில் இருந்து அரசு பேருந்து ஒன்று சுமார் 20 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது அப்பகுதி மேடான பகுதி என்பதால் பேருந்து மேட்டில் ஏற முடியாமல் திடீரென பின்பக்கமாக செல்ல தொடங்கியது.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பேருந்து பின்னால் வருவதைக் கண்டு வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.
அதன் பின் ஓட்டுனர் பலமுறை முயற்சி செய்தும் பேருந்து முன்பக்கமாக செல்லாமல் பின்னோக்கியே சென்றதால் பேருந்து நிலையத்திற்குள் இருந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மற்றும் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பேருந்தை தள்ளிக் கொண்டு சென்று பேருந்து நிலையத்தில் நிறுத்தினர்.
Also Read: அண்ணாமலை இருக்கும் மேடையில் ஏறுவீர்களா.. ஏறினால் கால் இருக்காது - சசிகலா புஷ்பா பேச்சால் பரபரப்பு
பேருந்து திடீரென சாலையில் நடுவில் நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து பேருந்து ஓட்டுனரிடம் கேட்டபோது பேருந்தில் பிரேக் பிடிக்காமல் போனதால் திடீரென பின்னோக்கி சென்றதாக தெரிவித்தார். இந்த நிகழ்வை பார்த்த பொதுமக்கள் இதேபோன்று பல பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் இது போன்ற சம்பவம் நடப்பதாகவும் இதற்கு போக்குவரத்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வரும் காலங்களில் பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
செய்தியாளர்: சங்கர் ( திண்டுக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Dindugal, Local News, Tamil News