ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்.. சொத்துதகராறில் கொடைக்கானலில் அரங்கேறிய கொடூரம்

மதுபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்.. சொத்துதகராறில் கொடைக்கானலில் அரங்கேறிய கொடூரம்

கைதான தினேஷ், கொலையான நடராஜ்

கைதான தினேஷ், கொலையான நடராஜ்

Dindigul News : கொடைக்கானலில் சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை மதுபோதையில்  அடித்து கொன்ற மகனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Kodaikanal, India

  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த நடராஜ்(50), கொடைக்கானல் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இவரது மகனான தினேஷ்(28) திருமணம் முடிந்த  நிலையில் தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் குடித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

  மேலும் இவரது தந்தையை அவ்வப்போது மதுபோதையில் அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி வழக்கம்போல் தினேஷ் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தந்தை நடராஜிடம் தங்களுக்கு தரவேண்டிய சொத்தை பிரித்து தருமாறு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

  இதையும் படிங்க : இரும்பு கம்பியால் ஹோட்டல் உரிமையாளரை அடித்துக்கொன்ற சமையல்காரர்... சேலத்தில் பரபரப்பு

  அப்போது வாக்குவாதம் ஒரு க‌ட்ட‌த்தில் முற்றிய நிலையில் தந்தையை ஆபாச வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தலையில் அடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த நடராஜை அக்கம்  பக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கும்  சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

  இதற்கிடையில், கொடைக்கானல் காவல்துறையினர் கடந்த 4 தினங்களுக்கு முன்பு தினேஷ் மீது கொலை முயற்சி  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது நடராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மகன் தினேஷ் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

  மகன் சொத்து பிரச்சனை காரணமாக பெற்ற தந்தையை அடித்து கொன்றாரா அல்லது வாரிசு வேலைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கொடைக்கான‌ல் செய்தியாள‌ர் - ஜாப‌ர்சாதிக்

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Dindigul, Local News