ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

சூரிய கிரகணம் 2022 : உலக்கை மற்றும் நாணயங்களை நிறுத்தி கிரகணத்தை பார்த்த மக்கள்!

சூரிய கிரகணம் 2022 : உலக்கை மற்றும் நாணயங்களை நிறுத்தி கிரகணத்தை பார்த்த மக்கள்!

புவி ஈர்ப்பு விசை - சூரிய கிரகணம் 2022

புவி ஈர்ப்பு விசை - சூரிய கிரகணம் 2022

Dindigul | திண்டுக்கல்லில்  சூரிய கிரகணத்தை கண்டறிய  பிடிமானம் இன்றி உலக்கை மற்றும் நாணயங்களை நிறுத்தி கிராவிட்டி போர்ஸ் மூலம் ( புவியீர்ப்பு விசை) சூரிய கிரகணத்தை ஆச்சரியத்துடன் கண்டு  அறிந்த பொதுமக்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Dindigul, India

  தமிழகத்தில் சூரிய கிரகணத்தை கண்டறிய நெல்லை, வேலூர், கொடைக்கானல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அறிவியல் ஆய்வுக் கூடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லில் சூரிய கிரகணத்தை கண்டறிய எந்தவிதமான வசதிகளும் இல்லாததால் திண்டுக்கல் நாகல்நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த எழுபத்தி ஐந்து வயதான மூதாட்டி நாகரத்தினம் தனது வீட்டு வாசலில் உலக்கை மற்றும் நாணயங்களை வைத்து பொதுமக்கள் சூரிய கிரகணத்தை கண்டறிய ஏற்பாடு செய்திருந்தார்.

  உலக்கையின் அடிப்பகுதி தட்டையாக இல்லாததால் அதை செங்குத்தாக எந்தப் பிடிமானமும் இன்றி நிறுத்தி வைக்க முடியாது. எனினும், சூரிய கிரகணத்தின்போது உலக்கை செங்குத்தாக நிற்கும். பழைய காலத்தில் கிராமங்களில் சூரிய கிரகணம் நிகழ்வதை கிராவிட்டி ஃபோர்ஸ் ( புவி ஈர்ப்பு விசை)   தத்துவத்தின் கீழ்  உலக்கையை செங்குத்தாக நிறுத்தி கண்டறிவார்கள்.

  கிரகணம் முடிந்தவுடன் இந்த உலக்கை தானாகவே கீழே விழுந்துவிடும்.  இந்நிலையில் நேற்று சூரிய கிரகணம் மாலை 5.14 நிமிடத்திற்கு துவங்கி 6.10 வரை 56நிமிடங்கள் நீடித்திருந்தது. சூரிய கிரகணத்தின் போது பொதுமக்கள் வெளியே வராமல் இருந்தால்  கதிர்வீச்சின் மூலம் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், இந்த நேரத்தில் உணவுகள் உண்டால் செரிமான சக்தி ஏற்படாமல் உடல் உபாதைகள்  ஏற்படும் எனவே உணவுகள் உண்ணாமலும் அறிவியல் ரீதியாகவும் இதை கடைபிடித்தால்  உடலை காத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டு வந்தது.

  Also see... சூரிய கிரகணம் 2022 : ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து பார்த்த கிராம மக்கள்! - ஏன் தெரியுமா?

  ஒவ்வொரு சூரிய கிரகணத்தின் போதும் எழுபத்தி ஐந்து வயதான நாகரத்தினம் என்ற மூதாட்டி இந்த உலக்கையை எந்த பிடிமானமும் இன்றி தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைப்பார். சூரிய கிரகணம் முடிந்த உடன் இந்த உலக்கையானது தானாக கீழே விழுந்துவிடும் இதை கண்டறிந்து இந்த அறிவியல் ரீதியான வழிமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள். சூரியகிரகணத்தின் பொழுது உலக்கையும் இந்த நாணயங்களும் செங்குத்தாக நிற்பது பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக உள்ளது என்று  கூறி வியப்புடன் கண்டு களித்து சென்றனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Dindigul, Solar eclipse