ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை.. கொடைக்கானலில் சிக்கிய பெங்களூரு இளைஞர்

சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை.. கொடைக்கானலில் சிக்கிய பெங்களூரு இளைஞர்

போதை காளான் விற்றவர்கள் கைது

போதை காளான் விற்றவர்கள் கைது

Dindigul District News : கொடைக்கானல் கலையரங்கம் அருகே சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா மற்றும் போதை காளான் விற்ப‌னை செய்த‌ வெளிமாநில‌ இளைஞ‌ர் உட்ப‌ட‌ மூவரை போலீசார் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Dindigul, India

  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து  காணப்படுவ‌தாக‌ காவ‌ல்துறையின‌ருக்கு தொட‌ர்ந்து புகார் வ‌ந்த‌து. இதனையடுத்து காவல்துறையினர் கொடைக்கானல் நகர்ப்பகுதி மற்றும் மலைக்கிராமங்களில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்த‌ன‌ர்.

  இந்நிலையில், இன்று கலையரங்கம் பகுதியில் சுற்றுலாப்பயணிகளுக்கு சில‌ர் போதைக்காளான் ம‌ற்றும் க‌ஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் கலையரங்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது சந்தேகம் அளிக்கும் வகையில் 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்ததில் போதை காளான் மற்றும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

  இதையும் படிங்க : பணம் தர முடியாது ஓசியில் சென்னை கூட்டிக்கிட்டு போ..! திமுககாரன் எனக் கூறி பேருந்தை வழிமறித்து போதை ஆசாமி ரகளை

  இதையடுத்து,  மூவரையும் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் சுற்றுலாப்பயணிகளை குறி வைத்து கஞ்சா மற்றும் போதை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

  இதுதொடர்பாக கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த சந்தோஷ்(32), ராஜபாண்டி(26), பெங்களூரை சேர்ந்த கிளிப்ட் அகஸ்டின்(27) உள்ளிட்ட கைது செய்து சிறையில் அடைத்தனர். 

  மேலும் இவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவும், 1 கிலோ போதை காளானும் பறிமுதல் செய்ய‌ப்ப‌ட்ட‌து. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  கொடைக்கான‌ல் செய்தியாள‌ர் - ஜாப‌ர்சாதிக்

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Dindigal