Home /News /dindigul /

வேடசந்தூரில் நூற்பாலை அதிபரிடம் ரூ.3 கோடி மோசடி... மும்பையில் பதுங்கியிருந்தவர் கைது

வேடசந்தூரில் நூற்பாலை அதிபரிடம் ரூ.3 கோடி மோசடி... மும்பையில் பதுங்கியிருந்தவர் கைது

மோசடி செய்தவர்களில் ஒருவரை கைது செய்த போலீசார்

மோசடி செய்தவர்களில் ஒருவரை கைது செய்த போலீசார்

Dindigul | திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நூற்பாலை அதிபரிடம் ரூ 3 கோடி மதிப்புள்ள துணி மோசடி செய்யப்பட்ட வழக்கில் மும்பையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மூன்று பேருக்கு போலிசார் வலை வீசி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூபதி என்பவர் பாலகங்கா நூற்பாலை நடத்தி வருகிறார். இவருக்கு மும்பையைச் சேர்ந்த பாரத் ஜித்தாபாய் பட்டேல், கிரண் குமார், சர்தார்பட்டேல், மற்றும் பிங்கோஷ் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர்.  இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து பூபதியிடம் கடந்த 2021 வருடம் 5ம் மாதம் ரூ 3 கோடி மதிப்புள்ள துணிகளை விலைக்கு வாங்கி சென்றுள்ளனர்.

    ஒரு மாதத்தில் பணம் தருவதாக கூறி துணிகளை வாங்கிச் சென்றவர்கள் அதன்பின் பதில் ஏதும் கூறாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். பூபதியால் இவர்களிடம் இருந்து பணம் வாங்க முடியவில்லை. மேலும் பலமுறை செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் சரியாக பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்த பூபதி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த மாதம் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே பிங் கோஷ் செல்போனை ஆய்வு செய்த போது மும்பையில் இருப்பது தெரியவந்தது.

    Also see...ஊருக்குள் அபூர்வ நாகங்கள் படையெடுப்பு.. அச்சத்தில் மக்கள்

    இதனையடுத்து மும்பைக்கு விரைந்த குற்றப்பிரிவு போலீசார் அங்கு பதுங்கி இருந்த பிங்கோஷை  கைது செய்து இன்று  திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் பின்னர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர். இதனையடுத்து மேஜிஸ்திரேட் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் பிங்கோஷ் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: சங்கர் , வேடசந்தூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cheating case, Dindigul

    அடுத்த செய்தி