ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

''ஊர்க்குருவி பருந்தாகாது.. ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி''.. திண்டுக்கலில் கவனம் ஈர்த்த போஸ்டர்!

''ஊர்க்குருவி பருந்தாகாது.. ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி''.. திண்டுக்கலில் கவனம் ஈர்த்த போஸ்டர்!

ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். முக்கியமாக சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் அது பட்டயம் கிடையாது என சீமான் விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India

விஜய் மற்றும் அஜித் நடிப்பில் சமீபத்தில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகின. அந்த படத்தின் வெளியீட்டிற்கு முன் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் விஜய் தான் நம்பர் 1 ஸ்டார் என கூறியது ரசிகர்களிடையே மோதல்களை ஏற்படுத்தின. அந்த நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவரும் விஜய் தான் தற்போது சூப்பர் ஸ்டார் என கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். முக்கியமாக சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் அது பட்டயம் கிடையாது. அந்தந்த காலத்தில் ஒருவர் சூப்பர் ஸ்டாராக வருவார்கள். இந்த தலைமுறையில் விஜய் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு ஆதரவாக பேசினார்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் திண்டுக்கலில் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த போஸ்டரில், “உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. அன்றும் இன்றும் என்றுமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான்” என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பிறகு ரஜினி ரசிகர்கள் இந்த போஸ்டரை இனையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த போஸ்டர் திண்டுக்கல் பகுதியில் கவனம் பெற்றுள்ளது.

First published: