முகப்பு /செய்தி /Dindigul / கொடைக்கானலில் மிதமான மழை.. குடைப்பிடித்து இயற்கை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் மிதமான மழை.. குடைப்பிடித்து இயற்கை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்

கொடைக்கானல்

ம‌ழையினால் ம‌லைப்ப‌குதி முழுவ‌தும் குளுமையான‌ சூழ‌ல் நில‌வுவ‌துட‌ன் முக்கிய‌ குடிநீராத‌ர‌ங்க‌ளும் உய‌ர்ந்து வ‌ருகின்ற‌ன‌.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொடைக்கான‌ல் ம‌ற்றும் சுற்றுவ‌ட்டார‌ப்ப‌குதிக‌ளில் இர‌ண்டு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ மித‌மான‌ ம‌ழை பெய்தது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல  சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என‌ சென்னை வானிலை மைய‌ம் அறிவித்திருந்த‌து.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதல்  மித‌மான‌ வெப்பம் நிலவி வந்த நிலையில் மாலை வேளையில் க‌ருமேக‌ங்க‌ள் சூழ்ந்து  சுமார் இர‌ண்டு  மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது குறிப்பாக அப்ச‌ர்வேட்ட‌ரி,  செண்பகனூர், மூஞ்சிக்கல், அண்ணாசாலை, உகார்த்தேநகர், ஏரிச்சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

கொடைக்கானல்

வார‌ விடுமுறையில் கொடைக்கான‌லில் குவிந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் பெய்து வ‌ந்த‌ மித‌மான‌ ம‌ழையினையும் பொருட்ப‌டுத்தாம‌ல் பிரைய‌ண்ட் பூங்காவில் பூத்துள்ள‌ வ‌ண்ண வ‌ண்ண‌ ம‌ல‌ர்க‌ளை குடையினை பிடித்த‌வாறும், ந‌ட்ச‌த்திர‌ ஏரியை சுற்றி ந‌டந்தும் புகைப்ப‌ட‌ம் எடுப்ப‌தற்கும் அதிக‌ ஆர்வ‌ம் காட்டின‌ர், இர‌ண்டு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ பெய்து வ‌ரும் ம‌ழையினால் ம‌லைப்ப‌குதி முழுவ‌தும் குளுமையான‌ சூழ‌ல் நில‌வுவ‌துட‌ன் முக்கிய‌ குடிநீராத‌ர‌ங்க‌ளும் உய‌ர்ந்து வ‌ருகின்ற‌ன‌.

செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக் (கொடைக்கான‌ல் )

First published:

Tags: Dindugal, Kodaikanal, Tamil News, Tourist spots