முகப்பு /செய்தி /Dindigul / மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்க பணி மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை.. பொதுமக்கள் பாராட்டு...

மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்க பணி மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை.. பொதுமக்கள் பாராட்டு...

மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்க பணி செய்த நெடுஞ்சாலைத்துறை

மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்க பணி செய்த நெடுஞ்சாலைத்துறை

பழனியில் சுமார் நூறு ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்க பணி மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து பழைய தாராபுரம் செல்லக்கூடிய சாலையில் நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மானூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் வளர்ந்து இருந்த சுமார் நூறு ஆண்டுகள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட வேண்டிய நிலை உருவானது.

அப்போது பொதுமக்களுக்கு நிழல் தரும் மரங்களை வெட்டாமல் சாலை அமைத்துக் கொடுக்க பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும், பழனிக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் திருவிழா காலங்களில் பாதயாத்திரையாக வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள் மானூர் கிராமத்திற்கு வரும்போது சாலை ஓரத்தில் குடை போல வளர்ந்துள்ள இந்த மரங்களுக்கு கீழே தங்கி இளைப்பாரி விட்டு செல்வதாகவும், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள்தான் தங்களது கிராமத்தின் அடையாளம் என்றும் அதனை வெட்ட வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

Also see... தொடர்மழை காரணமாக முதுமலை தெப்பக்காடு பகுதியில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சாலை... பழங்குடியின மக்கள் பாதிப்பு...

இதனைத் தொடர்ந்து சாலையோர மரங்களை வெட்டாமல் சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் தற்போது மரங்களை வெட்டாமலே பணிகளை செய்து முடித்துள்ளனர்.  கிராம மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்க பணியை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

செய்தியாளர்: அங்குபாபு நடராஜர், பழனி

First published:

Tags: Palani, Tree plants