Home /News /dindigul /

திண்டுக்கல்லில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடி உயர்வு...  ஒரு கிலோ மல்லிகை  ரூ1200க்கு விற்பனை...

திண்டுக்கல்லில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடி உயர்வு...  ஒரு கிலோ மல்லிகை  ரூ1200க்கு விற்பனை...

நாளை  ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் கோவில்களில்  சிறப்பு வழிபாடு  நடைபெறும். இதனால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. 

    திண்டுக்கல் நகரின் மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறத.  இங்கு திண்டுக்கல் சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, அனுமந்தராயன் கோட்டை,  வீரக்கல், செட்டியபட்டி, தாடிக்கொம்பு, சுக்காம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் விளைவிக்க கூடிய பூக்கள் திண்டுக்கல் அண்ணா பூ மார்க்கெட்டிற்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். 

    இங்கிருந்து கேரளா, பாண்டிச்சேரி மற்றும் சென்னை, திருச்சி, ஈரோடு,சேலம், விழுப்புரம் விருத்தாச்சலம் உட்பட மாநிலம் முழுவதும் விற்பனைக்காக சரக்கு வாகனம், பேருந்து, லாரி, கார் போன்றவற்றில் வியாபாரிகள் வாங்கிச் செல்வது வழக்கம். தமிழகத்தில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் வெகு விமர்சையாக திருவிழாக்கள் கொண்டாடுவது வழக்கம்.

    நாளை  ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் கோவில்களில்  சிறப்பு வழிபாடு  நடைபெறும். இதனால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.  கடந்த வாரம் ரூ 500க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ரூ 1,200 வரை விற்பனை ஆகிறது.

    மார்க்கெட்டிற்கு மல்லிகைப்பூவின் வரத்து குறைவும் இந்த விலையற்றதற்கு காரணமாகும். 150 க்கு விற்பனையான கனகாம்பரம் தற்பொழுது 200க்கு விற்பனை ஆகிறது. ரூபாய் 200 க்கு விற்பனையான முல்லை பூ தற்பொழுது ரூபாய் 350 க்கு விற்பனை ஆகிறது. ரூ220க்கு விற்பனையான ஜாதிப்பூ தற்பொழுது 350ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    Also see... தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..

    பெண்கள் தலைக்கு சூடிக் கொள்ளக்கூடிய பூக்களின் விலை மட்டுமே அதிரடியாக உயர்ந்துள்ளது. மற்ற பூக்களின் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dindigul, Flower Carpet

    அடுத்த செய்தி