திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் படி வழி பாதையையும், வின்ச் மற்றும் ரோப் கார் சேவையையும் பயன்படுத்தி மலை மீது சென்று வருகின்றனர். இந்நிலையில், காலையில் மலை மீது சாமி தரிசனம் செய்ய படி வழிப்பாதையில் சென்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 மாத கர்ப்பிணி பெண் நித்யா என்பவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
இந்நிலையில், நித்யாவிற்கு முதலுதவி தேவைப்பட்டுள்ளது. மலை மீது முதலுதவி செய்ய மருத்துவ பணியாளர்கள் பணியில் இல்லாத நிலையில் உடனடியாக வின்ச் மூலம் நித்யா மலை மீது இருந்து கீழே இறக்கி பாதுகாவலர்களால் கொண்டு வரப்பட்டுள்ளார். வின்ச் நிலையத்தில் ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் அவசர அவசரமாக கோவில் பாதுகாவலர் ரோப் கார் நிலையத்தில் இருந்து வின்ச்சுக்கு எடுத்து வந்துள்ளார். காலதாமதமாக வந்து கோவிலுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆக்சிஜன் உள்ளிட்ட போதிய மருத்துவ உபகரணங்கள் எதும் இல்லாமல் இருந்துள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்று சிறிது நேரத்தில் வின்சில் ஏறிய பெண் பக்தரின் காலில் கம்பி கிழித்து ரத்தம் சொட்ட துவங்கியது. உடனடியாக பெண் பக்தரை அழைத்துச் சென்று பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அவசர உதவிக்கு தேவைப்படும் ஆம்புலன்ஸ் வாகனம் பராமரிக்கப்படாமல், ஓட்டுநர் இல்லாமல் உள்ளது என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாதம் மாதம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : அங்குபாபு நடராஜன் - பழனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindigul, Local News