முகப்பு /செய்தி /Dindigul / எங்க அப்பாவே ஹெல்மெட் போடமாட்டாரு.. எஸ்.பி.யிடம் புகார் அளித்த போலீஸ்காரரின் மகள்

எங்க அப்பாவே ஹெல்மெட் போடமாட்டாரு.. எஸ்.பி.யிடம் புகார் அளித்த போலீஸ்காரரின் மகள்

அப்பாவை பற்றி எஸ்பியிடமே புகார் அளித்த போலீஸ்காரரின் மகள்

அப்பாவை பற்றி எஸ்பியிடமே புகார் அளித்த போலீஸ்காரரின் மகள்

Dindugal District : போலீஸ்காரர் ஒருவரின் மகள் பொதுமக்களை ஹெல்மெட் அணிய அறிவுறுத்தும் போலீசாரும் ஹெல்மெட் அணிய உறுதிப்படுத்த வேண்டும் எனது அப்பா ஹெல்மெட்  அணியாமல் செல்கிறார் என்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கூறியுள்ளார். இது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பழனி உட்கோட்ட அளவில் பணிபுரியும் போலீசாரின் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி பழனி போலீஸ்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் தலைமை தாங்கினார். டிஎஸ்பி சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சூப்பிரண்டு பாஸ்கரன் பேசும்போது, ”போலீசார் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளிடம் கல்வி மட்டுமல்லாது விளையாட்டு, யோகா என அனைத்திலும் சிறந்து விளங்கிட போதிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் இணைய குற்றங்கள் தொடர்பாக குழந்தைளுக்கு போதிய விழிப்புணர்வு செய்ய வேண்டும்” என்றார்.

பின்னர் போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். அப்போது போலீஸ்காரர் ஒருவருடைய மகள் பேசுகையில்,  பொதுமக்களை ஹெல்மெட் அணிய வேண்டுமென அறிவுறுத்தும் போலீஸ்காரர்களும் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

போலீஸ் அதிகாரியான தனது அப்பா ஹெல்மெட் போடுவதில்லை என்று மாவட்ட எஸ்பி-யிடம் அனைவர் முன்னிலையில் அவர் புகார் அளித்தார்.

அதற்கு பதிலளித்த எஸ்பி, ”போலீசார் மக்களுக்கு முன்மாதிரியாக சாலை விதிகளை பின்பற்றி ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போலீசாரின் குழந்தைகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். அத்துடன் தனது அப்பா குறித்து தைரியமாக புகார் அளித்த அந்த சிறுமிக்கும் அவர் பரிசு வழங்கினார்.

Also see... 2 தலைமுறைகளாக கோவில் நிலத்தில் விவசாயம் செய்பவர்களை காலி செய்ய சொல்வதா? - கொந்தளிக்கும் கரூர் விவசாயிகள்

நிகழ்ச்சியின் முடிவில் போலீசாரின் குழந்தைகளின் பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் போலீசாரின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகள், நடனங்கள் ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.

செய்தியாளர்: அங்குபாபு நடராஜன், பழனி

First published:

Tags: Dindugal, Helmet, Palani