ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

சீசன் ஜில்லுனு இருக்கு.. பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு விரைவில் சுக்கு காபி!

சீசன் ஜில்லுனு இருக்கு.. பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு விரைவில் சுக்கு காபி!

பழனி

பழனி

பழனி முருகன் கோயிலுக்கு படிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Palani, India

பழனி மலைக்கோயிலுக்கு  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.

இதில் பெரும்பாலானோர் படிப்பாதை வழியே தான் சென்று வருகின்றனர். பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு, அதிகாலையில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கவும், குளிருக்கு இதமாகவும் இருக்க சுக்கு காபி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது படிப்பாதை வழியே செல்லும் பக்தர்களுக்கு இடும்பர் சன்னதி அருகில் நீர்மோர் வழங்கப்படுகிறது. ஆனால் பனி பொழிவு அதிகரித்து வருவதால் அதற்கு பதிலாக சுக்கு காபி வழங்கப்படவுள்ளது. பக்தர் ஒருவருக்கு தலா 100 மில்லி வீதம் வழங்கப்படும். தற்போது நன்கொடையாளர்கள் சுக்கு காபி வழங்கி வருகின்றனர்.

இதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி பருகி செல்கின்றனர். இதுகுறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, காலையிலேயே குளித்துவிட்டு பசியோடு பக்தர்கள் வருவர். எனவே அவர்களுக்கு மிகுந்த களைப்பு இருக்கும். அதனால் தற்போது மோர் வழங்குவதற்கு பதிலாக சுக்கு காபி வழங்கலாம் என திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் அமலுக்கு வந்தவுடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுக்கு காபி வழங்கப்படும் என்றனர்.

செய்தியாளர்: அங்குபாபு, நடராஜன்

First published:

Tags: Coffee, Murugan temple, Palani