முகப்பு /செய்தி /திண்டுக்கல் / பன்றிகளுக்கு மாலை, மரியாதை... ஊர்வலம் அழைத்து சென்று வினோத வழிபாடு நடத்திய மக்கள்..!

பன்றிகளுக்கு மாலை, மரியாதை... ஊர்வலம் அழைத்து சென்று வினோத வழிபாடு நடத்திய மக்கள்..!

பன்றிகள் ஊர்வலம்

பன்றிகள் ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பன்றிகளை தரையில் கால் படாமல் ஊர்வலம் அழைத்து சென்று வினோத வழிபாடு நடத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லம்புதூரில் பட்டத்தரசி அம்மன் மகா சிவராத்திரி விழா வருடம் தோறும் கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு வடுகபட்டி, சிலமலை கோவில், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து சந்தனகருப்பு கோவிலில் வைத்து பூஜை செய்து பின்னர் ஊர்வலமாக பட்டத்தரசி அம்மன் கோவில் சென்றனர்.

அங்கு  உள்ள கோவிலில் பூஜை செய்வதற்காக நேர்த்திக்கடன் வைத்தனர். பின்னர், பன்றி குட்டிகளை அழைத்து வந்து அதன் கால்கள் தரையில் படாதவாறு  பாதைகளில் சேலைகளை விரித்து அதன் மீது பன்றிகளை நடக்க வைத்து மேளதாளம் முழங்க  ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இறுதியாக கோவிலில் விருக பூஜை செய்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

First published:

Tags: Dindigul, Local News, Temple