முகப்பு /செய்தி /திண்டுக்கல் / நடுக்காட்டில் ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு வழிபாடு.. கொடைக்கானல் பீமன் கோவிலில் தரிசனம் செய்த மக்கள்..

நடுக்காட்டில் ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு வழிபாடு.. கொடைக்கானல் பீமன் கோவிலில் தரிசனம் செய்த மக்கள்..

பீமன் கோவிலில் தரிசனம் செய்த மக்கள்

பீமன் கோவிலில் தரிசனம் செய்த மக்கள்

Dindigul News : கொடைக்கானல் பேத்துப்பாறை ம‌லைக்கிராமத்தில் விவசாயம் செழிக்க 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 6 அடி பீமன் கோவிலில் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகள் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிட்டு நடுக்காட்டில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்படுகிறது. இங்குள்ள வனப்பகுதியின் நடுவே 6 அடி பீமன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் பேத்துப்பாறை பொதுமக்கள் பராமரித்து வ‌ழிப‌ட்டு  வருகின்றனர். இந்த கோவிலில் வருடந்தோறும் மாசி மாதம் பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாமி கும்பிட்டு நேர்ச்சை நிறைவேற்றுவது வழக்கம். பீமன் கோவிலில் இரவு முதல் திருவிழா துவங்கியது. இதில் விவசாயம் செழிப்பதற்கும், இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் மற்றும் பேத்துப்பாறை கிராம மக்கள் பீமனை பார‌ம்ப‌ரிய‌ இசை முழ‌ங்க‌ வழிபாடு நடத்தி ஆடு, கோழி, காய், கனிகள் காணிக்கையாக பீமனுக்கு படைப்பது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு 20க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஆடுகள், கோழிகளை பலியிட்டு வழிபாடு நடத்தினர். இதில் பழங்குடியின மக்களின் குரவி கூற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நெருப்பின் மீது நின்றும், வனப்பகுதியில் உள்ள சாட்டைகள் போன்ற தாவரத்தை கொண்டு கை, கால் மற்றும் உடம்பில் அடித்துக்கொண்டு பக்தர்களுக்கு குறி சொல்லி வருகின்றனர். வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு கொடைக்கானல் சுற்றுவட்டார மலை கிராம பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பீமனை சாமி தரிசனம் செய்து அசைவ விருந்து உணவு உண்டு ம‌கிழ்ந்து சென்றனர்.

இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அசைவ விருந்து தயார் செய்யப்பட்டது. மேலும் பீமன் சாமியை வழிபாடு செய்திட பேத்துப்பாறை கிராமத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் வனப்பகுதிக்குள் நடந்து சென்றும், ஆற்றை கடந்து சென்றிட அக்கறைக்கும், இக்கரைக்கு கயிறை கட்டி ஆற்றை சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் பொதுமக்களுடன் பீமன் சாமி கலந்துகொள்வதாக இன்றளவிலும் நம்பப்படுகிறது. இந்த கோவிலானது 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக உள்ளதாக இப்பகுதி மக்களால் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

செய்தியாள‌ர் : ஜாப‌ர்சாதிக் - கொடைக்கான‌ல்

First published:

Tags: Dindigul, Local News