ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

''அவங்கள உள்ள விடாதீங்க'' பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் பெண்கள் போராட்டம்!

''அவங்கள உள்ள விடாதீங்க'' பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் பெண்கள் போராட்டம்!

பழனி போராட்டம்

பழனி போராட்டம்

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் எங்களால் அவர்களை கோயிலுக்குள் அனுமதி அளிக்க முடியாது என ஆர்ப்பாட்டம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Palani | Dindigul

  பழனி சித்தரேவு கிராமத்தில் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுத்து குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் காவளபட்டி ஊராட்சிக்குட்பட்ட சித்தரேவு கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

  இந்த  சித்தரேவு கிராமத்தில்அமைந்துள்ள உச்சி காளியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோயிலில் பொது மக்கள் வழிபட்டு வந்திருந்தனர். கடந்த பத்து வருட காலமாக  பட்டியல் இன மக்களுக்கு கோயிலுக்குள் சென்று வழிபடவிடாமல் மற்றொரு சாதியை சேர்ந்த சிலர் தீண்டாமையை கடைபிடித்து வருகின்றனர்.

  இதனை கண்டித்து  பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட நீதிமன்றம், கோயிலில் அனைவரும் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

  இதையும் படிங்க | பிரதமர் வரும் கல்லூரி வாசலில் பாஜகவினர் மறியல் - போலீசாருடன் வாக்குவாதம்

  இதனை அடுத்து கோட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பட்டியலின சமூகத்தினர் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

  இந்த நிலையில் பெண்கள் சிலர் கோயிலுக்குள் சென்று பட்டியலின சமூகத்தினர்  சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி பட்டியல் இன மக்களை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

  செய்தியாளர்: அங்குபாபு நடராஜன், பழனி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Dindigul, Protest, Scheduled caste