ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

தைப்பூசம் ஸ்பெஷல்.. ரூ.250 செலுத்தினால் வீடு தேடி வரும் பழனி முருகன் பிரசாதம்.. அஞ்சல் சேவை விவரம்!

தைப்பூசம் ஸ்பெஷல்.. ரூ.250 செலுத்தினால் வீடு தேடி வரும் பழனி முருகன் பிரசாதம்.. அஞ்சல் சேவை விவரம்!

பழனி முருகன்

பழனி முருகன்

Thaipusam 2023 | தைப்பூசத்திற்கு பழனி முருகனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே அருட்பிரசாதங்களை பெற்று முருகனின் அருளை பெற ஏற்பாடு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Palani | Dindigul

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் எங்கிருந்தாலும் பிரசாதத்தை பெற்று கொள்ளும் படி அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் அறுபடை வீடுகளிலும் குவிவது வழக்கம். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பக்தர்கள் தைப்பூசத்தையொட்டி வீட்டில் இருந்தே பிரசாதங்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.

அதில், "விரைவு அஞ்சல் சேவை" என்ற பெயரில் தைப்பூசத்திற்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி பிரசாதத்தை பெற ரூ.250 செலுத்தி, அருகில் உள்ள தபால் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், பிறகு வீட்டு வாசலுக்கே பிரசாதம் டெலிவரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாத தொகுப்பில், சுவாமி புகைப்படம், பழனி பஞ்சாமிர்தம், விபூதி பிரசாதம் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Dindigul, Local News, Palani, Palani Murugan Temple