முகப்பு /செய்தி /திண்டுக்கல் / பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா : 2வது நாளில் குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா : 2வது நாளில் குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Palani Murugan Temple | ஏராளமான பக்தர்கள் வருகை காரணமாக அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Palani, India

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா இரண்டாம் நாள் இன்று பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

பழனி முருகன் கோவிலில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் நேற்று பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வருவது வழக்கம்.

தைப்பூச திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். மேலும் தை மாத கார்த்திகை தினம் என்பதால்  பாதையாத்திரை பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. ஒயிலாட்டம்,மயிலாட்டம் என வரும் பக்தர்கள் பரவசத்துடன் முருகனை தரிசித்து வருகின்றனர்.

தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாள் இன்று காலை முத்துக்குமாரசாமி தந்த பல்லக்கிலும் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் வருகை காரணமாக அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Dindugal, Local News, Palani Murugan Temple