ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

நாளை வரை மட்டுமே மூலவர் தரிசனம்.. கும்பாபிஷேகத்தால் பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!

நாளை வரை மட்டுமே மூலவர் தரிசனம்.. கும்பாபிஷேகத்தால் பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!

கோப்பு படம்

கோப்பு படம்

Palani murugan temple devotees | பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Palani | Dindigul

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூலவரை நாளை மதியம் வரை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசிக்க குவிந்து வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. வருகிற 27ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை மலைக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவையொட்டி மலைக் கோயிலில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் ஓதி வருகின்றனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி மலை கோயில் 64 மிராஸ் பண்டாரங்கள் சண்முக நதியில் இருந்து சண்முக நதி தீர்த்தத்தை யானை முன்னே வர ஊர்வலமாக மலை கோயிலுக்கு எடுத்துச் சென்றனர்.   நாளை மாலை மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சன்னதி திரையிடப்பட உள்ளது. நாளை மதியம் வரை மட்டுமே பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் இன்று பழனிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

மலை அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காவடிகளை சுமந்து ஆடி பாடி கிரிவலம் வந்து முருகனை தரிசிக்க மலை மீது சென்று வருகின்றனர். மலை மீது நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

செய்தியாளர்: அங்குபாபு நடராஜன், பழனி.

First published:

Tags: Local News, Palani, Palani Murugan Temple