ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

தோட்டத்தில் இளைஞர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம்.. இருவர் கைது..!

தோட்டத்தில் இளைஞர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம்.. இருவர் கைது..!

பழனி துப்பாக்கி சூடு

பழனி துப்பாக்கி சூடு

இவர்கள் தோட்டத்தில் துப்பாக்கியை பயன்படுத்தி முயல்கள் போன்றவற்றை பிடித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Palani | Tamil Nadu

  பழனி அருகே தனியார் தோட்டத்தில் வேலை செய்தவர் மீது ஏர்கன் குண்டு பாய்ந்த சம்பவத்தில், நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டியில் தனியார் தோட்டத்தில் வேலை செய்தவர் மீது ஏர்கன் குண்டு பாய்ந்தது தொடர்பாக   மேலும், ஏர்கன்னை பறிமுதல் செய்த போலீஸார் அதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பழனியை அடுத்த பெத்தயநாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை கும்பகோணம் திருவிலாங்குடியை சேர்ந்த மோகன்ராஜ்(35) என்பவர் குத்தகைக்கு நடத்தி வந்துள்ளார்.

  நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த நிலையில் விவசாய காவல் பணிக்காக கும்பகோணத்தை சேர்ந்த கார்த்தி(24) என்பவரை வேலைக்கு வைத்துள்ளார்.  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காவல் பணியில் இருந்த கார்த்தி மீது ஏர்கன் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

  உடனடியாக கார்த்தியை பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்த மோகன்ராஜ் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்று காப்பாற்றினார்.  தோட்டத்தில் இரவு பணியில் இருந்த போது மர்மநபர்கள் வந்தபோது சத்தம் கேட்டு வந்ததாகவும், அப்போது யாரோ சுட்டதில் குண்டு  பாய்ந்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்திருந்தனர்.

  இதையும் படிங்க | ஆற்றின் நடுவே மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு - போலீஸார் தீவிர விசாரணை

  இதுகுறித்து திண்டுக்கல் எஸ்பி., பாஸ்கரன் தலைமையில் கூடுதல் எஸ்பி., சந்திரன், டிஎஸ்பி., சிவசக்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் மோகன்ராஜ் சொந்தமாக ஏர்கன் வைத்திருந்ததாகவும், அதை கவனக்குறைவாக லோடு செய்த போது தவறி வெடித்ததில் கார்த்திக் மார்பில் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

  இதையடுத்து மோகன்ராஜ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மானூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(34) என்ற இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது துப்பாக்கி சுடுதல் மற்றும் கொலைமுயற்சி ஆகிய இரு வழக்கின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்ததாவது:-  பழனியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள ஏர்கன் என்பது கடைகளிலேயே விற்பனை செய்யப்படும் துப்பாக்கியாகும்.  இதை ரைபிள் கிளப்பில் பழகுவோர் பயன்படுத்துகின்றனர்.

  ஏர்கன் துப்பாக்கி சூடு சம்பந்தமாக தற்போது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முதலில் குற்றத்தை மறைக்க முயற்சி செய்துள்ளனர்.

  பின்னர் விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்டு துப்பாக்கியை ஒப்படைத்தனர்.  தோட்டத்திலேயே தண்ணீர் நிரம்பியிருந்த தொட்டியில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தனர்.  இந்த துப்பாக்கியில் பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளனர்.  இது எதற்காக என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  இவர்கள் தோட்டத்தில் கன்னி வைத்து முயல்கள் போன்றவற்றை பிடித்துள்ளனர்.  அதற்காக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர்.  இதில் காயம்பட்ட கார்த்திக் மீது அவரது ஊரில் கொலை குற்றம் உள்ளிட்ட இரு குற்றங்கள் முன்னரே உள்ளன என தெரிவித்தார்.

  செய்தியாளர்: அங்குபாபு, பழனி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Palani