ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

துப்பாக்கி தோட்டா பாய்ந்து இளைஞர் காயம் : பழனி அருகே பரபரப்பு

துப்பாக்கி தோட்டா பாய்ந்து இளைஞர் காயம் : பழனி அருகே பரபரப்பு

பழனி துப்பாக்கி சூடு

பழனி துப்பாக்கி சூடு

விசாரணையில் வெடித்தது ஏர்கன் என கண்டுபிடிப்பு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Palani | Tamil Nadu

  பழனியருகே தோட்டத்து காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சுடபட்டு நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  பழனி அருகே மானூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தங்கி இருந்த இளைஞர்கள் கார்த்தி, மோகன்ராஜ் ஆகியோர் இரவு நேரத்தில் மக்காசோள காட்டிற்கு வந்த பன்றிகளை விரட்ட துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர்.

  அப்போது எதிர்பாராத விதமாக கார்த்தி என்பவர் மீது துப்பாக்கி தோட்ட பாய்ந்துள்ளது. இதனால் தோள்பட்டையில் காயமடைந்த கார்த்தியை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

  தொடர்ந்து அங்கு அறுவை சிகிச்சை மூலமாக அவரது உடலில் இருந்த 2 குண்டுகள் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

  இதையும் படிங்க | இனி பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு ரோப் காரில் செல்லலாம்...

  அதில், தோட்டத்து வீட்டில் இருந்து ஏர்கன் துப்பாக்கியில் பயன்படுத்தும் 18 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தோட்டத்திற்கு வரும் பறவைகள், பன்றிகள் போன்ற விலங்குகளை விரட்டுவதற்காக ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும், இரவு நேரத்தில் விலங்குகளை விரட்ட துப்பாக்கியை வெடித்தபோது எதிர்பாராத விதமாக தோட்டா உடலில் பட்டதும் தெரிய வந்துள்ளது.

  இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாலுகா போலீசார் கார்த்தியுடன் தங்கியிருந்த மோகன்ராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி தோட்டா பாய்ந்து இளைஞர் காயம் அடைந்த சம்பவத்தால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Blast, Palani