முகப்பு /செய்தி /திண்டுக்கல் / பழனியில் விளைநிலத்திற்குள் புகுந்து யானை தாக்கியதில் விவசாயி பலி

பழனியில் விளைநிலத்திற்குள் புகுந்து யானை தாக்கியதில் விவசாயி பலி

யானை தாக்கி உயிரிழந்த விவசாயி

யானை தாக்கி உயிரிழந்த விவசாயி

Elephant Attack | யானை தாக்கி காயமடைந்த விவசாயி பழனி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Palani, India

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரவில் விளைநிலத்திற்குள் புகுந்து யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சிந்தலவாடம்பட்டியில், மேற்குத் தொடர்ச்சி மலை வனபகுதியை ஒட்டி, ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அங்கு மா, கொய்யா, தென்னை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தண்டபாணி என்பவர் தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு நேரத்தில் அங்கு வந்த ஒற்றை யானையை சத்தம் எழுப்பி தண்டபாணி விரட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த யானை, தண்டபாணியை துரத்தி தாக்கியதில் அவர் படுகாயமடைத்தார். பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஒன்றை யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Dindigal, Elephant, Palani