முகப்பு /செய்தி /Dindigul / அக்னிபத்: பாகிஸ்தான் ஆதரவு வெளிநாட்டு சக்திகள் கலவரத்தை தூண்டுகின்றன: அர்ஜூன் சம்பத்

அக்னிபத்: பாகிஸ்தான் ஆதரவு வெளிநாட்டு சக்திகள் கலவரத்தை தூண்டுகின்றன: அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

தமிழக வாலிபர்கள் அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து ராணவத்தில் சேவை செய்ய வேண்டும். வாந்திகளை நம்ப வேண்டாம் என்று அர்ஜுன் சம்பத் கூறினார். 

  • Last Updated :

மத்திய அரசு ராணுவத்தில் கொண்டு வந்துள்ள அக்னிபத் அருமையான திட்டம் என்றும் பாகிஸ்தான் ஆதரவு வெளிநாட்டு சக்திகள் எதிர்க்ட்சிகளை பயன்படுத்திக்கொண்டு உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலத்தில் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாரதிபுரம், என் ஜி ஓ காலனி,  கொத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தங்கள் கட்சிக்கொடியை ஏற்றிவிட்டு  தொண்டர்களை சந்தித்து பேசினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத்,  அதிமுக வலிவும் பொழிவும் பெற்றிருப்பதைத்தான் அனைவரும் விரும்புகின்றோம். இரட்டைத்தலைமை ஒற்றைத்தலைமை என்பதெல்லாம் கிடையாது.

அவர்களுக்குள்ளே ஈகோ விவகாரம் போயிட்டு இருக்கு. இதெல்லாம் அவர்கள் உட்கட்சி விவகாரம். அவர்கள் பேசித் தீர்த்துக்கொள்வார்கள்.  திமுக என்னும் தீய சக்தியை வீழ்த்த எம்ஜிஆரால் அதிமுக உருவாகப்பட்டது. இப்போது அதிமுகவில் நடப்பதை அந்த கட்சியினர் சரி செய்து கொள்வார்கள். இப்போது நடப்பது எல்லாம் அக்கட்சியின் உள் விவகாரம்.

அதிமுகவும் எதிர்கட்சி தான், பிஜேபியும் எதிர்கட்சி தான்.  திமுக செய்யக்கூடிய ஊழலை தட்டிக்கேட்கிறோம். திமுக அராஜக நடவடிக்கைகளை எதிர்த்து நிற்கிறோம். யாரெல்லாம் திமுகவை எதிர்க்கிறார்களோ அவர்கள் எல்லாம் எதிர்கட்சி. அதனால் அதிமுக பாஜக உறவு சுமூகமாக இருக்கிறது. அதிமுக சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக இருக்கிறது. பாஜக திமுக ஊழல்களை அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறது. ரெண்டு பேரும் சேர்ந்து தான் சிறப்பாக செயல்பட்டுக்கிட்டு இருக்கிறார்கள். ரெண்டு பேரும் எதிர்கட்சி தான். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது.

இதையும் படிக்க: அதிமுக தோல்விக்கு இபிஎஸ் செயல்களே காரணம்.. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நாளிதழ்களில் விளம்பரம்

இரட்டை இலைதான் தான் தலைமை. எம்.ஜி.ஆர் தான் தலைமை. ஜெயலலிதா தான் தலைமை. அதிமுகவின் கோடானு கோடி தொண்டர்கள் தான் தலைமை. தற்போது நிலவும் பிரச்சனை பேச்சுவார்த்தையில் சரியாகிவிடும். அதிமுக போன்ற மக்கள் இயக்கத்தில் இதெல்லாம் சகஜம் தான். அதிமுகவில் பிளவு வந்துவிட்டால் அதில் திமுக குளிர்காயலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் கனவில் மண் தான் விழும்.

அக்னிபத் என்பது ஒரு அருமையான வாய்ப்பு. பள்ளி மாணவர்கள் பிளஸ் டு முடித்தவுடன் இரண்டு வருடமாவது மிலிட்டரியில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும். அதன் பிறகு தான் அவர்கள் மேல்படிப்புக்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. பாரதப்பிரதமர் மோடி இப்போது மிலிட்டரியில் 4 ஆண்டுகள் சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்க நல்ல வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்து இருக்கிறார். இதை பாகிஸ்தான் ஆதரவு வெளிநாட்டு சக்திகள் எதிர்க்ட்சிகளை பயன்படுத்திக்கொண்டு உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலத்தில் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க: விஜய் பிறந்தநாளையொட்டி 365 நாட்களும் நலத்திட்ட உதவிகள்: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு

அதே போல தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள்,  எஸ்.டி.பி.ஐ. போன்ற அமைப்புகள்  வன்முறையை தூண்டுவிட  மேற்கொள்ளும் முயற்சி எடுபடாது. தமிழ்நாட்டில் என்.சி.சி. அமைப்புகள் இருக்கிறது. வெளிநாடுகளில் லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள வாலிபர்கள் மிலிட்டரியில் சென்று சேவை செய்கிறார்கள். அது போல அக்னிபாத் திட்டத்தில் கட்டாயம் படிப்பு முடித்தவுடன் எல்லையில் போய் சேவை செய்ய வேண்டும். தமிழக வாலிபர்கள் அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து ராணவத்தில் சேவை செய்ய வேண்டும். வாந்திகளை நம்ப வேண்டாம்’ என்றுஅர்ஜுன் சம்பத் கூறினார்.

top videos

    செய்தியாளர்: சங்கர் - திண்டுக்கல்

    First published:

    Tags: Agnipath, Arjun Sampath