ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

கொள்ளை அழகில் கொடைக்கானல்.. ஆங்காங்கே கொட்டும் நீர்வீழ்ச்சிகள் - கொண்டாட்டத்தில் சுற்றுலா பயணிகள்

கொள்ளை அழகில் கொடைக்கானல்.. ஆங்காங்கே கொட்டும் நீர்வீழ்ச்சிகள் - கொண்டாட்டத்தில் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் நீர்வீழ்ச்சி

கொடைக்கானல் நீர்வீழ்ச்சி

Kodaikanal | நீர்வீழ்ச்சி நகரமான கொடைக்கானல் மலைப்பகுதி, 50க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிகமாக நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kodaikanal, India

  மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நீர் நிலைகளுக்குச் செல்லும் ஓடைகள், அருவிகள், நீர் வீழ்ச்சிகள் என அனைத்திலும் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கொடைக்கானல் நகரப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை அருவி, தேவதை நீர்வீழ்ச்சி, புலிச்சோலை அருவி அஞ்சுவீடு அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றthu.

  மேலும் ஆங்காங்கே 50க்கும் மேற்ப‌ட்ட‌ இட‌ங்களில் புதியதாக பிர‌தான‌ ம‌லைச்சாலைக‌ளில் சிறு சிறு அருவிகளும் தோன்றி சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது.  தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் தேக்கங்களில் நீரின் மட்டம் வெகுவாக‌ உயர்ந்துள்ளது.

  நட்சத்திர ஏரியும் த‌ன‌து முழு கொள்ளளவினை எட்டி உபரி நீரை வெளியேறுகின்றது. மேலும் மழை காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும்  பச்சை பசேல் என ப‌சுமை போர்த்தி சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.

  Also see... ஜவ்வாது மலை புத்தூர் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்ற இளைஞர் மரணம்

  நீர் பெருக்கெடுத்து ஓடும் அருவிகளின் முன்னே சுற்றுலா பயணிகள் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர. மேலும் பிர‌தான‌ ம‌லைச்சாலைக‌ளில் வாக‌ன‌ங்க‌ளில் ப‌ய‌ணிக்கும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் ம‌ற்றும் பொதும‌க்க‌ள் புதிதாக‌ தோன்றியுள்ள‌  சிறு குறு அருவிகளில் கொட்டிவ‌ரும் நீரினை ர‌சித்த‌வாறு த‌ங்க‌ள‌து ப‌ய‌ண‌ங்க‌ளை தொட‌ர்கின்ற‌ன‌ர்.

  செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக்,கொடைக்கான‌ல்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kodaikanal