ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

இனி பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு ரோப் காரில் செல்லலாம்...

இனி பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு ரோப் காரில் செல்லலாம்...

 ரோப் கார் சேவை

ரோப் கார் சேவை

Kodaikanal | மிழ்நாட்டிலேயே முதன்முறையாக பழனி-கொடைக்கானல் இடையே நவீன ரோப்கார் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kodaikanal, India

  இந்தியா முழுவதும் 18 இடங்களில் ரோப் கார் திட்டம் அமுல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - பழனி இடையே ரோப்கார் திட்டமும் ஒன்றாகும். இந்த நிலையில் முதற்கட்டமாக ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பொறியாளர்கள் குழு கொடைக்கானலில் நிலவும் கால நிலை, இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து, சுற்றுலா அலுவலகத்தில் ஆலோசனை செய்தன‌ர்.

  இதனையடுத்து கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட‌ கோவில்பட்டி மற்றும் குறிஞ்சி ஆண்டவர் கோயில் உள்ளிட்ட ப‌ல்வேறு இடங்க‌ளிலும் ம‌லைத்தொட‌ர்க‌ளிலும், ம‌லைப் ப‌குதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து வெளிநாட்டு பொறியாளர் குழுவின‌ர் தெரிவிக்கும் போது சுமார் 450 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும், கொடைக்கானலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் ரோப்கார் அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

  ஆய்வு செய்யும் அதிகாரிகள்

  Also see... சென்னையில் 9-வது மாடியில் இருந்து குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை..

  மேலும் இந்த பணிகளானது 6 மாதம் வரை நடைபெறும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ரோப் கார் திட்டம் முத‌ற்க‌ட்ட‌ ஆய்வுப் ப‌ணிக‌ள் ந‌டைபெறுவ‌து சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் இந்த‌ ஆய்வில் நெடுஞ்சாலைதுறை, சுற்றுலாதுறை அதிகாரிக‌ளும் உட‌னிருந்த‌ன‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக், கொடைக்கானல்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kodaikanal