முகப்பு /செய்தி /திண்டுக்கல் / பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மண்டல தலைவர் கைது.. பழனியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடவடிக்கை..

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மண்டல தலைவர் கைது.. பழனியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடவடிக்கை..

கைதான முகமது கைசர்

கைதான முகமது கைசர்

NIA : பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் என்பவரை என்.ஐஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகரை சேர்ந்தவர் முகமது கைசர் (50). பழனியில் டீக்கடை நடத்திவருகிறார். மேலும், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இன்று பகல் 12 மணியளவில் பழனி  காந்திரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் இருந்த முகமது கைசரை (என்.ஐ.ஏ) தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்து பழனி நகர காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், அங்குள்ள போக்குவரத்து காவல்நிலைய அலுவலகத்தில் வைத்து முகமது கைசரிடம் விசாரணை நடத்தினர். மேலும், டெல்லியில் இருந்து வந்துள்ள 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினரும் முகமது கைசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை, கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு, கர்நாடக மாநிலத்தில் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் பலரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது பழனியை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : அங்குபாபு நடராஜன் - பழனி

First published:

Tags: Crime News, Dindigul, Local News