ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

பழனியில் நவராத்திரி விழா... மகிஷாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு...

பழனியில் நவராத்திரி விழா... மகிஷாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு...

பழனி கோயில்

பழனி கோயில்

Palani | பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகிஷாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Palani, India

  முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான நவராத்திரிவிழா கடந்த 26 ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி பத்து நாட்களாக விமர்சையாக கொண்டாடப்பட்டுவந்தது.

  நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோதீஸ்வரர் கோயில் முன்பு நடைபெற்றது. முன்னதாக மலைக்கோயிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது.

  இரவு 8 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் துர்க்கையாக ஆவாஹனமாகி வாழைமரம் மற்றும் வன்னி மரத்தில் அம்பெய்து மகிஷாசூர வதம் செய்யும் நிகழ்வு நடந்தது.

  Also see... கழிவு நீர் தொட்டியில் 3 நாட்களாக தவித்த கன்றுக்குட்டி மீட்பு...

  மகிஷாசூரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Dindigul, Murugan temple, Palani