Home /News /dindigul /

கொடைக்கானலில் போதை காளான் விற்பனை அதிகரிப்பு.. குண்டர் சட்டம் பாயும்.. காவல் துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை

கொடைக்கானலில் போதை காளான் விற்பனை அதிகரிப்பு.. குண்டர் சட்டம் பாயும்.. காவல் துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை

கொடைக்கானல் காவல் நிலையம்

கொடைக்கானல் காவல் நிலையம்

கொடைக்கானலில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த கேரள மாநில‌ முதியவர் உள்ளிட்ட 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இது போல தொடர்ந்து போதை காளான் விற்பனை செய்வ‌து க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல் துணை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனையானது அதிகரித்துள்ளது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் கொடைக்கானல் காவல் துறையினர் கொடைக்கான‌ல் மலைப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து காவல் துறையினர் மன்னவனூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது சுற்றுலா பயணிகளின் வாகனங்களை குறிவைத்து ஒரு கும்பல் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்ய முயன்றுள்ளது.

    இதனை பார்த்த காவல் துறையினர் அந்த கும்பலை பிடித்து விசாரணை மேற்கொண்டன‌ர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்யும் போது போதை காளான் ம‌ற்றும் க‌ஞ்சா இருந்தது தெரியவந்தது,  இதனையடுத்து காவல் துறையினர் அந்த கும்பலை காவல் நிலையத்திற்கு அழைத்து வ‌ந்து விசாரணை மேற்கொண்டன‌ர்.

    போதை காளான் விற்பனை


    விசாரணையில் மன்னவனூர் கிராமத்தை சேர்ந்த வைரவேல்(32), லட்சுமணன் (38), மதன்(24), குணசேகரன்(52), பூண்டியை சேர்ந்த சத்யராஜ்(32), கேரளாவை சேர்ந்த சரத்குமார்(60) என்பதும் இவ‌ர்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளிட‌ம் க‌வ‌ர்ச்சிக‌ர‌மாக‌ பேசி க‌ஞ்சா, ம‌ற்றும் காளான் விற்ப‌னையில் ஈடுப‌ட்ட‌தும் தெரியவந்தது.

    இத‌னை தொட‌ர்ந்து இவர்களிடம்  இருந்து 1 கிலோ போதைகாளான் ம‌ற்றும் 1 கிலோ கஞ்சாவினையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ள‌ன‌ர். மேலும் ம‌லைக்கிராம‌ங்க‌ளில் இவ‌ர்க‌ளது கூட்டாளிக‌ள் யாரும் உள்ள‌ன‌ரா என‌வும் விசாரணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர்.

    Also see...குழித்துறையில் களைக்கட்டியது வாவுபலி பொருட்காட்சி..

    கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் ம‌ற்றும் க‌ஞ்சா விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் அவ‌ர்க‌ள‌து வ‌ங்கி க‌ண‌க்குக‌ளும் முட‌க்க‌ப்ப‌டும் என‌வும் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    செய்தியாள‌ர்: கொடைக்கான‌ல், ஜாப‌ர்சாதிக்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cannabis, Dindigul, Kodaikanal

    அடுத்த செய்தி