Home /News /dindigul /

மகளுடன் நெருங்கி பழகிய நபரை எச்சரித்த தாய் படுகொலை - பழனி அருகே பயங்கரம்

மகளுடன் நெருங்கி பழகிய நபரை எச்சரித்த தாய் படுகொலை - பழனி அருகே பயங்கரம்

கொலை குற்றவாளி கைது

கொலை குற்றவாளி கைது

Palani : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெண் துப்புரவு பணியாளர் கொலையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மகளுடன் தொடர்பில் இருந்த நபர் கொலை செய்தது விசாரணையில் அம்பலம்.

    பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (55). இவர், பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கணவனைப் பிரிந்து வாழும் அன்னம்மாளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் விடுமுறை நாளில் வீட்டை விட்டு வெளியே சென்று அன்னம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.

    இருதினங்களுக்கு பிறகு பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு அருகில் அன்னம்மாள் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராமத்தினர் பழனி தாலுக்கா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து  விசாரணையை துவங்கினர்.

    மேலும் உடல் அழுகி நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனைக்காக அன்னம்மாளின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் உடனடியாக போலீசார் கொலையாளியை நெருங்க முடியவில்லை.

    இதனிடையே கிராமத்தில் உள்ள அனைவரிடமும் போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். துப்புரவு பணியாளரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க கோரி கிராம மக்களும், சில அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு தினங்களுக்கு உடலை வாங்க மறுத்த உறவினர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசாருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    போலீசார் விசாரணை


    இந்தநிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து குற்றவாளியை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். போலீசார் பல்வேறு கோணங்களில் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர். இந்த நிலையில் அன்னம்மாளின் மகள் புவனா (27) மீது சந்தேகம் அடைந்த போலீசார் புவனாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புவனாவுக்கு சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததும் அவர்களுடன் தொலைபேசியில் பேசி பழகி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புவனாவின் ஆண் நண்பர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், புது ஆயக்குடியைச் சேர்ந்த கனகராஜ்  அன்னம்மாளை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    கூலி வேலைக்குச் சென்று வரும் கனகராஜுக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், அன்னம்மாளின் மகள் புவனாவிடம் பழகி வந்ததும், விஷயம் தெரிந்து அன்னம்மாள் கனகராஜை எச்சரித்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கனகராஜ் அன்னம்மாளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    Must Read : பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிகள் முடியைப் பிடித்துக்கொண்டு சண்டை - பாளையங்கோட்டையில் பரபரப்பு

    விறகு சேகரிக்க கம்மாய்க்கு அருகில் சென்ற அன்னம்மாளை நோட்டமிட்ட கனகராஜ், பின் தொடர்ந்து சென்று அன்னம்மாளை தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளது. கொலை சம்பந்தமாக கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்த பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மகளுடன் பழகிய நண்பரை எச்சரித்ததற்காக தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - பழனி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Dindigul, Murder, Palani

    அடுத்த செய்தி