ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

மாண்டஸ் புயல்..! முறிந்து விழும் மரங்கள்..! ஹோட்டல்களில் முடங்கிய சுற்றுலா பயணிகள்.. வெறிச்சோடிய கொடைக்கானல்

மாண்டஸ் புயல்..! முறிந்து விழும் மரங்கள்..! ஹோட்டல்களில் முடங்கிய சுற்றுலா பயணிகள்.. வெறிச்சோடிய கொடைக்கானல்

விழுந்த மரங்களை அகற்றும் பணி

விழுந்த மரங்களை அகற்றும் பணி

ம‌லைச்சாலைகளில் ப‌ய‌ணிப்போர் பாதுகாப்பாக‌ மித‌மான‌ வேக‌த்தில் அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளின்றி ப‌ய‌ணிக்க வேண்டாம் என‌வும் கோட்டாட்சியர் ராஜா  அறிவுறுத்தியுள்ளார்,

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kodaikanal, India

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருவதால்,பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்து வருகின்றன, மரங்கள் விழுவதன் காரணமாக மின் கம்பங்கள்,மின் கம்பிகள் சேதமடைந்துள்ளதால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

மாண்டஸ் தீவிர புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய மித‌மான‌ மழை பெய்து வருவதால் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன. இதன் காரணமாக மின் கம்பங்கள் மின் கம்பிகள், மின் மாற்றிக‌ள் சேதமடைந்துள்ளதால் நேற்று இர‌வு முதல் கொடைக்கானல் மலைப்பகுதியில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு  இருளில் மூழ்கியுள்ளது.

குறிப்பாக ஏரிச்சாலை, செண்பகனூர் பகுதி, செயின் மேரிஸ் சாலை மற்றும் பிரதான மலைச்சாலைகளில் முறிந்து விழுந்துள்ள  மரங்களை தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி நிர்வாக‌த்தின‌ர் இணைந்து ஜேசிபி வாகனம்,மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு தீவிர‌மாக‌ அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Read More : தூத்துக்குடியில் திடீரென 30 அடிக்கு உள்வாங்கிய கடல்..

மேலும் பலத்த காற்று தொடர்ந்து வீசி வருவதால் இன்னும் பல மரங்கள் முறிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆதலால் விழும் மரங்களை அப்புறப்படுத்த பிர‌த்யேக‌ குழுக்கள் அமைக்க‌ப்பட்டு உள்ளதாகவும், ம‌லைச்சாலைகளில் ப‌ய‌ணிப்போர் பாதுகாப்பாக‌ மித‌மான‌ வேக‌த்தில் அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளின்றி ப‌ய‌ணிக்க வேண்டாம் என‌வும் கோட்டாட்சியர் ராஜா  அறிவுறுத்தியுள்ளார்.மேலும் பலத்த காற்றுடன் கூடிய‌ மழை பெய்து வருவதால் சுற்றுலாப்ப‌யணிகள் த‌ங்கும் விடுதிகளிலும், பொதும‌க்க‌ள் வீடுக‌ளிலும் முட‌ங்கியுள்ள‌தால் முக்கிய‌ சாலைக‌ள் அனைத்தும் ஆட்க‌ள் ந‌ட‌மாட்ட‌மின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

 செய்தியாள‌ர் :  ஜாப‌ர்சாதிக் (கொடைக்கான‌ல்)

First published:

Tags: Cyclone Mandous, Kodaikanal, Local News, Tamil News