திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து
மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், கொடைக்கானல் கீழ்மலை கிரமமான தாண்டிக்குடி வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் பட்டலங்காடு என்ற இடத்தில் சாலையின் தடுப்பு சுவர் இடிந்து சாலை சரிந்தது.
இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மட்டும் காவல் துறையினர் அனுமதித்தனர். பிற வாகனங்கள் செல்வதற்கு தாண்டிக்குடி காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். சரிந்துள்ள சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், மழையின் காரணமாக காமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கானல்காடு கிராமத்தில் 2 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

மண்சரிவு
Must Read : கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரத்தின்போது கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன்... வயதை மறைத்து சிறையில் அடைப்பு - பெற்றோர் புகார்
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 30ஆம் தேதி வரை திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.