ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

கொடைக்கானல் பேரிஜ‌ம் ஏரிக்கு செல்ல‌ த‌ற்காலிக‌  த‌டை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானல் பேரிஜ‌ம் ஏரிக்கு செல்ல‌ த‌ற்காலிக‌  த‌டை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பேரிஜம் ஏரி

பேரிஜம் ஏரி

பேரிஜ‌ம் ஏரிக்கு செல்ல‌ த‌ற்காலிக‌  த‌டை விதித்துள்ள‌தால் ஏரியை காண‌ வ‌ந்த‌  சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் ஏமாற்றமடைந்துள்ளனர்.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kodaikanal |

த‌மிழ்நாடு ச‌ட்ட‌ம‌ன்ற‌ பேர‌வை ம‌திப்பீட்டு குழுவின‌ர் ஆய்வு மேற்கொள்ள‌ கொடைக்கான‌ல் வ‌ருகை புரிவ‌தால் பேரிஜ‌ம் ஏரிக்கு சுற்றுலாப்ப‌ய‌ணிகள் செல்ல‌ இர‌ண்டு நாட்க‌ளுக்கு த‌ற்காலிக‌ த‌டை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ச‌ர்வதேச‌ சுற்றுலாத‌ல‌மாகும், இங்கு தூண்பாறை, குணாகுகை, ப‌சுமைப‌ள்ள‌தாக்கு, பைன்ம‌ர‌ச்சோலை, மோய‌ர்ச‌துக்க‌ம், பிரைய‌ண்ட்பூங்கா, ரோஜாபூங்கா என‌ ப‌ல்வேறு சுற்றுலா இடங்கள் இருந்தாலும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை பெரிதும் க‌வ‌ரும் வித‌மாக‌ அமைந்திருப்ப‌து பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ன‌ப்ப‌குதியில் அமைந்துள்ள‌ வ‌ன‌த்துறையின‌ரின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌ பேரிஜ‌ம் ஏரி, தொப்பிதூக்கிப்பாறை, அமைதிப்ப‌ள்ள‌தாக்கு, உள்ளிட்ட‌ சுற்றுலா த‌ல‌ங்க‌ளாகும்.

இதையும் வாசிக்க:   உங்க தன்னம்பிக்கை ஓஹோனு வளரும்.. இந்த 6 விஷயத்த மட்டும் மறக்காதீங்க!

இந்த‌ பேரிஜ‌ம் வ‌ன‌ப்ப‌குதிக்கு செல்ல‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ன‌த்துறையின‌ரின் அனும‌தி பெற்று அத‌ற்குரிய‌ க‌ட்ட‌ண‌ம் செலுத்தி நாள் தோறும் குறிப்பிட்ட‌ அளவிலான சுற்றுலாப்ப‌யணிக‌ள் சென்று அங்குள்ள‌ இய‌ற்கை எழில் கொஞ்சும் மன‌திற்கும், க‌ண்க‌ளுக்கும் புத்துண‌ர்ச்சி அளிக்கும் சுற்றுலாத‌ல‌ங்க‌ளை க‌ண்டு ர‌சித்து வ‌ருவ‌து வாடிக்கையான‌ ஒன்று.

இந்நிலையில் த‌மிழ்நாடு ச‌ட்ட‌ம‌ன்ற‌ மதிப்பீட்டு பேர‌வைக்குழுவின‌ர் இன்று இர‌வு  கொடைக்கான‌ல் வ‌ருகை புரிந்து ப‌ல்வேறு இடங்க‌ளை ஆய்வு மேற்கொள்ள‌ உள்ள‌ன‌ர், குறிப்பாக‌ பேரிஜ‌ம் ஏரிப்ப‌குதிக்கும் இந்த‌க்குழுவின‌ர் ஆய்விற்கு செல்ல‌ இருப்ப‌தால் ஆய்வின் போது இடைஞ்ச‌ல் ஏற்ப‌டாத வ‌கையில், பேரிஜ‌ம் ஏரிக்கு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் செல்ல‌ இன்றும் (31-10-2022, 1-11-2022)நாளையும் இர‌ண்டு நாட்க‌ளுக்கு த‌ற்காலிக‌மாக‌ த‌டைவிதித்துள்ள‌தாக‌ வ‌ன‌த்துறையின‌ர் அறிவித்துள்ள‌னர்.

இதையும் வாசிக்க: தமிழகத்தில் 4-ம் தேதிவரை தொடர் கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை அலெர்ட்!

பேரிஜ‌ம் ஏரிக்கு செல்ல‌ த‌ற்காலிக‌  த‌டை விதித்துள்ள‌தால் பேரிஜ‌ம் ஏரியை காண‌ வ‌ந்த‌  சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் பேரிஜ‌ம் ஏரிக்கு  செல்ல‌ முடியாம‌ல் ஏமாற்ற‌ம‌டைந்த‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

Published by:Salanraj R
First published:

Tags: Kodaikanal