கொடைக்கானல் பெர்ன்ஹில்சாலை பகுதியில் பட்டப்பகலில் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் இளைஞருக்கு கத்தி குத்து, இளைஞரை குத்திய நபரை காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா நகர் பகுதியில் கார்த்திக்(வயது 29) என்ற இளைஞர் காதல் திருமணம் செய்து மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார், இந்நிலையில் அன்னை தெரசா நகர் பகுதி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ராமேஸ்வரத்தை சேர்ந்த சத்தியநாதன்( வயது 28) என்பவர் மேலாளராக கடந்த ஒரு வருடமாக பணி புரிந்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வீட்டு வரை அழைத்து செல்லும் அளவிற்கு இவர்கள் இருவரின் நட்பு தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சத்தியநாதனுக்கும், கார்த்திக் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது, மேலும் இருவரும் தொலைபேசியில் அடிக்கடி உரையாடுவதும், குறுச்செய்திகள் அனுப்புவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கார்த்திக் இருவரையும் பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டுகொள்ளாத இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் முன்கூட்டியே சத்தியநாதனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து நேற்று மாலை சத்தியநாதன் குடிபோதையில் இருந்த நிலையில் இருசக்கர வாகனத்தை இயக்க வைத்து கார்த்திக் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பெர்ன்ஹில்சாலை பகுதியில் சென்றுள்ளனர். அப்போது சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாததால் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை கார்த்திக் எடுத்து சத்தியநாதன் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் நிலை தடுமாறிய சத்தியநாதன் இருசக்கரவாகனத்தில் இருந்து கீழே விழுந்து சாலையில் ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். இவரை பின் தொடர்ந்த கார்த்திக் விரட்டி வந்துள்ளார். இதுதகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே இளைஞரை குத்தி தப்பி ஓடிய கார்த்திகை கைது செய்து கத்தியையும் பறிமுதல் செய்தனர். தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலென்ஸ் பணியாளர்கள் சத்தியநாதனை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பெர்ன்ஹில் சாலை பகுதியில் கொடைக்கானல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்- ஜாபர்சாதிக் (கொடைக்கானல் )
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.