ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

கொடைக்கானலின் அழகை ரசிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

கொடைக்கானலின் அழகை ரசிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பசுமை போர்த்திய மலைமுகடுகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும் கடல்போல் பொங்கி வரும் மேகக்கூட்டங்களையும் கண்டு ரசிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kodaikanal, India

கொடைக்கானலில் மலை முகடுகளின் நடுவே மேகக் கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் அழகை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

அரையாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக, கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்துள்ளனர். இந்நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதியில் மிதமான வெப்பத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவுவதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் அவர்கள், மோயர் சதுக்கம், அமைதி பள்ளத்தாக்கு, பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் தெரியும் பசுமை போர்த்திய மலைமுகடுகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும் கடல்போல் பொங்கி வரும் மேகக்கூட்டங்களையும் கண்டு ரசிக்கின்றனர். மூலையாறு அருவி, வட்டக்கானல் அருவி, தேவதை நீர்வீழ்ச்சிகளையும் அவர்கள் பார்வையிடுகின்றனர்.

First published:

Tags: Kodaikanal