ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

தொட‌ர் விடுமுறை.. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - 2கி.மீ-க்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தொட‌ர் விடுமுறை.. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - 2கி.மீ-க்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

Kodaikanal | கொடைக்கானலில் ஆயுத‌பூஜை தொட‌ர் விடுமுறையில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகளால் ப‌ல்வேறுப்ப‌குதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kodaikanal, India

  திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் ம‌லைப்ப‌குதிக‌ளில் நில‌வும் இத‌மான‌ கால‌ நிலையினையும், ர‌ம்ய‌மான‌ சீதோஷ்ண‌ நிலையையும் ர‌சிக்க‌வும், ஆயுத‌பூஜை, ச‌ர‌ஸ்வ‌திபூஜை, தொட‌ர் விடுமுறையினை கொண்டாட‌வும் காலை முத‌லே  கொடைக்கானலுக்கு வ‌ரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.குறிப்பாக மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணாக்குகை, தூண்பாறை, ம‌ன்ன‌வ‌னூர் சூழ‌ல் சுற்றுலா உள்ளிட்ட‌ சுற்றுலாத்தலங்களை கண்டு ர‌சிப்ப‌த‌ற்கு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக காண‌ப்ப‌டுகின்ற‌து.

  மேலும் சுற்றுலாப்ப‌ய‌ணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காக்க‌ளில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்து வருவதுடன் செல்பி மற்றும் புகைப்படமும் எடுத்து உற்சாகமடைந்து வருகின்றனர்.

  அதே போல வெள்ளி நீர் வீழ்ச்சி, வ‌ட்ட‌க்கான‌ல் அருவி, பாம்பார் அருவி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு அருவிக‌ளின் அழகினையும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால், வெள்ளிநீர்வீழ்ச்சி,   மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்ச‌ர்வேட்ட‌ரி, அப்ப‌ர்லேக்வியூ உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

  Also see... கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொலை..! மனைவி கைது..!

  அதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பிரதான சாலைகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக‌ அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளின் வ‌ருகை அதிக‌ரித்துள்ள‌தால் சுற்றுலா தொழில் புரிவோர் ம‌கிழ்ச்சிய‌டைந்துள்ள‌ன‌ர். மேலும் இது போன்ற‌ தொட‌ர் விடுமுறை நாட்களில் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிச‌ல் ஏற்ப‌டா வ‌ண்ண‌ம் சீர் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளதும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

  செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக்,கொடைக்கான‌ல்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kodaikanal, Tourist spots, Traffic