ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

குளிரால் மயங்கிய குட்டி குரங்கு.. தண்ணீர் கொடுத்து உயிரை காப்பாற்றிய வியாபாரிகள்! பரிதவிக்கும் வீடியோ!

குளிரால் மயங்கிய குட்டி குரங்கு.. தண்ணீர் கொடுத்து உயிரை காப்பாற்றிய வியாபாரிகள்! பரிதவிக்கும் வீடியோ!

குட்டி குரங்கு வீடியோ வைரல்

குட்டி குரங்கு வீடியோ வைரல்

கடையை திறக்க சென்ற வியாபாரிகள் மயங்கி கிடந்த குரங்கு குட்டியை தூக்கி மறுவாழ்வு அளித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kodaikanal | Tamil Nadu

  மழைக்காலத்தில் அர‌வ‌ணைத்து காப்பாற்ற தாய் இல்லாததால் த‌னிமையில் குளிரில் ம‌ய‌ங்கிய‌ நிலையில்  ப‌ரித‌வித்துக்கொண்டிருந்த‌ குர‌ங்கு குட்டியை அப்பகுதி வியாபாரிகள் தண்ணீர் கொடுத்து காப்பாற்றினர்.

  திண்டுக்க‌ல் மாவ‌ட்டம் கொடைக்கானல் மலைப்ப‌குதிக‌ளில் க‌ட‌ந்த‌ ஒரு வார‌த்திற்கும் மேலாக‌ இடைவெளி விட்டு மழை பெய்து வ‌ருகின்றது.

  இன்று காலை ம‌ழை குறைந்த நிலையில் கோக்க‌ர்ஸ்வாக் ப‌குதியினை சேர்ந்த‌ வியாபாரிக‌ள்,  வியாபார‌த்திற்காக‌ த‌ங்க‌ள‌து க‌டைக‌ளை திற‌க்க‌ சென்றுள்ள‌ன‌ர். அப்போது ம‌ழையில் ந‌னைந்து ம‌ய‌ங்கிய‌ நிலையில் பாறையின் நடுவே கிடந்த குரங்கு குட்டியை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  தொடர்ந்து அந்த குரங்கு குட்டியை தூக்கி அரவணைத்து, சுடு  தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செயலுக்கு பலரும் வியாபாரிகளுக்கு அவர்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

  செய்தியாள‌ர்:  ஜாப‌ர்சாதி, கொடைக்கான‌ல்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Kodaikanal, Monkey, Viral Video