முகப்பு /செய்தி /திண்டுக்கல் / கொடைக்கானலில் உலா வரும் ஒற்றை காட்டெருமை.. பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானலில் உலா வரும் ஒற்றை காட்டெருமை.. பொதுமக்கள் அச்சம்

காட்டெருமை

காட்டெருமை

Kodaikanal news : கொடைக்கானல் ஏரிச்சாலை ம‌ற்றும் பிய‌ர்சோழா சாலைக‌ளில் அதிகாலையில் திடீரென‌ உலா வ‌ரும் ஒற்றைக் காட்டெருமையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுன‌ர்கள் அச்சமடைந்துள்ளனர்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kodaikanal, India

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக முக்கிய‌ நகர்ப்பகுதிகள், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள்  உலா வருவதும்  பொதும‌க்க‌ளையும்  விவசாயிக‌ளையும் அச்சுறுத்துவ‌தும், விவ‌சாயிக‌ள் வ‌ள‌ர்க்கும் கால்ந‌டைக‌ளையும்,வ‌ளர்ப்பு  பிராணிக‌ளையும் தாக்குவ‌தும் தொட‌ர்கதையாக‌ உள்ளது.

இந்நிலையில் அதிகாலை வேளையில் அதிகம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடும் இடமான  ஏரிச்சாலை ம‌ற்றும் பிய‌ர்சோழா சாலைக‌ளில் திடீரென்று ஒற்றை காட்டெருமை உலா வந்ததால்,சாலையில் பயணித்த  இருச‌க்க‌ர‌ ம‌ற்றும் நான்கு ச‌க்க‌ர‌ வாகன ஓட்டுன‌ர்க‌ளும் அச்சம் அடைந்தனர்.

வாகனங்களை இயக்க முடியாமலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமலும் அவதியடைந்த‌ன‌ர்.இதனால் சிறிது நேர‌ம் அப்பகுதி ப‌ர‌ப‌ர‌ப்பாக‌வும் காண‌ப்ப‌ட்ட‌து.

நகர்ப்பகுதிகளில் காட்டெருமை உலா வருவதை புதிதாக காணும் சுற்றுலா பயணிகள் அத‌னை புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை வனத்துறையின‌ர் கவனம் செலுத்தி மனித விலங்கு மோதல் ஏற்படும் முன் காட்டெருமைகள் ந‌க‌ர் ப‌குதிக்குள் உலா வருவதை க‌ட்டுப்ப‌டுத்த‌ நிர‌ந்த‌ர‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக் ( கொடைக்கான‌ல்)

First published:

Tags: Dindigul, Kodaikanal, Local News, Tamil News