முகப்பு /செய்தி /திண்டுக்கல் / கொடைக்கானல் ட்ரிப் ப்ளான் பண்ணிருக்கீங்களா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

கொடைக்கானல் ட்ரிப் ப்ளான் பண்ணிருக்கீங்களா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

கொடைக்கானல்

கொடைக்கானல்

Kodaikanal Lake closed | கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் காட்டுயானைகள் தஞ்சம் அடைந்ததால் வனத்துறையினர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kodaikanal, India

காட்டு யானைக‌ள் குட்டியுட‌ன் பேரிஜ‌ம் பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ன‌ப்ப‌குதிகளில் முகாமிட்டுள்ள‌தால் இன்று முத‌ல் சுற்றுலாப்ப‌ய‌ணிகள் செல்ல‌ த‌ற்காலிக‌ த‌டை விதித்து வ‌ன‌த்துறையினர் அறிவித்துள்ளனர்.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ச‌ர்வதேச‌ சுற்றுலாத‌ல‌மாகும். இங்கு தூண்பாறை, குணாகுகை, ப‌சுமைப‌ள்ள‌தாக்கு, பைன்ம‌ர‌ச்சோலை, மோய‌ர்ச‌துக்க‌ம், பிரைய‌ண்ட்பூங்கா, ரோஜாபூங்கா என‌ ப‌ல்வேறு சுற்றுலாத‌ல‌ங்க‌ள் இருந்தாலும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை பெரிதும் க‌வ‌ரும் வித‌மாக‌ அமைந்திருப்ப‌து பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ன‌ப்ப‌குதியில் அமைந்துள்ள‌ வ‌ன‌த்துறையின‌ரின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌ பேரிஜ‌ம் ஏரி, தொப்பிதூக்கிப்பாறை,  அமைதிப்ப‌ள்ள‌தாக்கு, ம‌திகெட்டான் சோலை உள்ளிட்ட‌ சுற்றுலாத‌ல‌ங்க‌ளாகும்.

இந்த‌ பேரிஜ‌ம் வ‌ன‌ப்ப‌குதிக்கு செல்ல‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் வ‌ன‌த்துறையின‌ரின் அனும‌தி பெற்று அத‌ற்குரிய‌ க‌ட்ட‌ண‌ம் செலுத்தி நாள் தோறும் குறிப்பிட்ட‌ அளவிலான சுற்றுலாப்ப‌யணிக‌ள் சென்று அங்குள்ள‌ இய‌ற்கை எழில் கொஞ்சும் மன‌திற்கும், க‌ண்க‌ளுக்கும் புத்துண‌ர்ச்சி அளிக்கும் சுற்றுலாத‌ல‌ங்க‌ளை க‌ண்டு ர‌சித்து வ‌ருவ‌து வாடிக்கையான‌ ஒன்று.

இந்நிலையில் நேற்று மாலை முதல் இந்த‌ பேரிஜ‌ம் ப‌குதியில்  காட்டு யானைக‌ள் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌தால் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் பாதுகாப்பு க‌ருதி இன்று முதல் ம‌று அறிவிப்பு வ‌ரும் வ‌ரை பேரிஜ‌ம் ஏரிக்கு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் செல்ல‌ த‌ற்காலிக‌மாக‌ த‌டைவிதித்துள்ள‌தாக‌ வ‌ன‌த்துறையின‌ர் அறிவித்துள்ள‌னர். மேலும் பேரிஜ‌ம் ஏரிப்ப‌குதியில் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌ யானை கூட்ட‌ம் வேறு ப‌குதிக்கு செல்கின்ற‌தா என‌வும் வ‌ன‌த்துறையின‌ர் தீவிர‌மாக‌  க‌ண்காணித்து வ‌ருகின்ற‌ன‌ர்.

கொடைக்கான‌ல் பேரிஜம் ஏரிப்பகுதியை காண‌ வ‌ந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் பேரிஜ‌ம் ஏரிக்கு செல்ல‌ அனும‌தி இல்லை என்ப‌தால் ஏமாற்ற‌ம் அடைந்து திரும்பி செல்கின்றனர்.

செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக், கொடைக்கான‌ல்.

First published:

Tags: Dindigul, Kodaikanal, Local News, Tourist spots