ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

கந்துவட்டி: தாய், மகனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்! ஒருவர் கைது!

கந்துவட்டி: தாய், மகனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்! ஒருவர் கைது!

கந்துவட்டி கொடுமை

கந்துவட்டி கொடுமை

கோயில் திருவிழாவிற்கு சென்ற தாய், மகனை மின் கம்பத்தில் கட்டி வைத்து மாறி மாறி தாக்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Natham | Tamil Nadu | Dindigul

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொடுத்த கடனை திருப்பி செலுத்தாததால், இருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாத்தாம்பட்டியை சேர்ந்த ராமன்(52) தற்போது திருப்பூரில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் 2 வருடத்திற்கு முன் சாத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த அம்பலம் என்பவரின் மகன் ராஜேஷ்(35) என்பவரிடம் ரூ. 1 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

மாதம் மாதம் முறையாக வட்டி செலுத்தி வந்த நிலையில், கொரோனா பேரிடரால் கடனை திருப்பு செலுத்த முடியாத சூழல் உருவானது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமனின் மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் சாத்தாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களைப் பார்த்த அம்பலம் குடும்பத்தினர் வட்டியும் அசலையும் உடனடியாக கொடுக்க வேண்டும் என தகராறு செய்துள்ளனர்.

பணம் இல்லை என அவர்கள் கூறியதால், அம்பலம் குடும்பத்தினர் நிகழ்ச்சியில் இருந்தவர்களை அழைத்து சென்று  ஊர் மையப்பகுதியில் உள்ள மந்தையில் வைத்து இருவரையும் மின் கம்பத்திலும், மரத்திலும் கட்டி வைத்து கன்னத்தில் சரமாரியாக தாக்கி உள்ளனர்.  மேலும்  மாலை 6 மணி கட்டி வைத்து இரவு 11 மணி வரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராமனின் மகன் ஜோதிமணி(28) அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது கந்து வட்டி பிரிவில் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் என்பவரை கைது செய்த போலீசார், மேலும் தப்பி ஓடிய  குற்றவாளிகளான அம்பலம், சாந்தியை வலை வீசி தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: சங்கர், நத்தம்.

Published by:Anupriyam K
First published:

Tags: Crime News, Interest, Natham